பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


ந.பி. ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை முயற்சி இயக்கம் எழுத்துவில் தொடர்ந்து. மயன், சிட்டி,வல்லிக்கண்ணன் ஒன்று சேர, பின்னர். தி.சோ.வேணுகோபாலன், டி.கே.துரைஸ்வாமி, தரும சிவராமூ, சி.மணி, எஸ். வைத்தீஸ்வரன்,குறிப்பாக இன்னும் சிலரும் கலந்து கொண்டு புதுக்கவிதையை வளப்படுத்தி வருகிறார்கள். சுமார் இருபத்தைந்து கவிகளின் குரல்களை எழுத்து வாசகர்கள் இந்த நான்கு ஆண்டுகளில் ‘எழுத்து’ மூலம் கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்தக்குரல்கள் ஒரேதொனியாக இல்லாமல் பல்வேறு விதமாகதன் தன் ஒளியைக் காட்டும் முகமாக அமைந்திருப்பதை பார்க்கிறோம். அவர்கள் வைக்கும் முத்திரைகளும் வேறுவேறு.

இத்தச் சமயத்தில் 1912-17ல் ‘இமேஜிஸம்’ என்ற படிமக் கொள்கையை வைத்துக் கொண்டு இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் டி.இ. ஹும், எஸ்ரா பவுண்டு, ரிச்சர்ட் ஆல்டிங்டன், எமி லோவல் போன்றோர்கவிதை புனருத்தாரணத்தில் முழுமூச்சாக ஈடுபட்டதை கவனத்துக்கு கொண்டு வர வேண்டி இருக்கிறது. தங்களுக்கு முன் சென்ற பெரியவர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. எஃப், எஸ். ஃபிளிண்ட் என்பவர் எழுதினார்.

‘Rhyme and metre are artifical and external additions to poetry and that as the various changes that can be rung upon them were worked out, they grew more and more insipid until they have become contemptible and encumbering.’

இது இன்றைய தமிழ்க் கவிதை சம்பந்தமாக எவ்வளவு வார்த்தைக்கு வார்த்தை பொருந்துகிறது! பல நூற்றாண்டுகளுக்கு முன்பு படைப்பான விரல்விட்டு எண்ணக் கூடிய சில சிறந்த நூல்களுக்குப் பிறகு இந்த நூற்றாண்டு ஆரம்பகால பாரதிக்கு வரும் வரையில், சொல் ஆடம்பரமும் நச்சுப்படுத்தப்பட்ட உள்ளடக்கமும் மலிந்த படைப்புகள் எத்தனை? பாரதிக்குப் பிறகு இன்று வரை கூட அதே ரீதியில், கற்பனையும் கருத்தும் இல்லாமல் பத்திரிகை செய்யுள்களாக தீபாவளிக்கும் பொங்கலுக்கும், பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ஐந்தறைப் பெட்டியிலிருந்து ‘ஃபார்மூலா’ ரீதியாகத் தயாராகும் ஓசைச் சொல் செய்யுள்களும் மெட்டுப் பாட்டுகளும் எத்தனை? இதை வைத்துத் தமிழில் 2000 கவிகள் இருப்பதாக ஒரு பெருமை வேறு புதுக்கவிகள் இயக்கம் இதையெல்லாம் உடைத்து

239