இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா
இவ்வாறு ஒரு கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்தார்கள். அவர்களுடைய பண்பாடும் பேச்சும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தன. இப்படிப் பலவிதமான அனுபவங்கள் எங்களுக்குக் கிட்டின.
திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு மாதங்கள் செல்லப்பாவுடன் சுற்றியதோடு நான் நின்று விட்டேன். கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வதற்கு செல்லப்பா என்னையும் உடன் அழைத்தார். நான் போகவில்லை. அவர் மட்டும் தனியாக புத்தகச் சுமைகளுடன் திரிந்தார்.
கனமான புத்தகப் பைகளைச் சுமந்து சுமந்து அவரது தோள்பட்டைகளில் வலியும், அலைந்து கால்களில் மூட்டுவலியும் ஏற்பட்டு தொல்லை கொடுக்கத் தொடங்கிய பிறகுதான் செல்லப்பா ஊர்சுற்றிப் புத்தகங்கள் விற்பதை நிறுத்திக் கொண்டார்.
18