பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெளுத்தது நான்கு


துவைக்க
வெளுத்தது
துணி.

காதலன்
சுவைக்க
வெளுத்தது
இதழ்!

ஞாயிறு
வெறிக்க
வெளுத்தது
நிலம்

வாழ்வு
நெறிக்க
வெளுத்தது
முடி.

262>