அவரது 75-85 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் சி.சு. செல்லப்பா புரிந்துள்ள சாதனைகள் பெரிது- பெரிது என வியக்கச் செய்வனவாகும்.
‘என் சிறுகதைப் பாணி’, ‘பிச்சமூர்த்தியின் கவித்துவம்' ‘ஊதுவத்திப் புல்' (ந.பி. கவிதைகள் பற்றியது), 'எழுத்து களம்' ‘எழுத்து' பத்திரிகை அனுபவங்கள்), பி.எஸ். ராமையாவின் கதைக் களம் இப்படி அநேகம் எழுத்துப் பிரதிகளை உருவாக்கினார். ஒவ்வொன்றும் 800 பக்கங்கள், ஆயிரம் பக்கங்கள் என்று வரும். ஒவ்வொன்றும் தனித்தனி சாதனைதான்.
இவற்றில் முதல் மூன்றும் புத்தகங்களாக வந்து விட்டன. 'ராமையாவின் சிறுகதைக்களம்’ நூலை செல்லப்பா தனது இறுதி நாட்களில் சிரமப்பட்டு புத்தகமாக கொண்டு வந்தார். அவர் கடைகியாகப் பிரசுரித்த நூல் அதுதான்.
இவற்றை எல்லாம் விட முக்கியமானது - மகத்தான சாதனை என்று குறிப்பிட வேண்டியது - தனது விடுதலைப் போராட்ட கால அனுபவங்களை அடிப்படையாக்கி செல்லப்பா எழுதிய 'சுதந்திர தாகம்’ எனும் இரண்டாயிரம் பக்க நாவல் ஆகும்.
அதைத் தனது தள்ளாத வயதிலும் எழுதி முடித்தது ஒரு பெரும் சாதனை. பெரும் சிரமங்களுக்கிடையிலும் அதை மூன்று பாக நூலாக அச்சிட்டு வெளியிட்டது உண்மையிலேயே மாபெரும் சாதனைதான்.
செல்லப்பா இலக்கியத்தையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார் என்று சொல்லலாம். எப்போதும், எவரிடமும் அவர் இலக்கிய விஷயங்கள் பற்றியே பேசினார். தமிழில் இதுவரை செய்யபட்டிருப்பவை போதாது; இன்னும் அதிகம் செய்யப்படவேண்டும்; என்னஎன்ன செய்யலாம், அவற்றை எப்படிச் செய்யவேண்டும் என்று அவர் சதா சிந்தித்து வந்தார். அவற்றை நண்பர்களிடம் ஆர்வத்தோடு எடுததுச்சொல்வதில் உற்சாகம் கண்டார்.
தமிழில் விமர்சனம் வளரவேண்டும் என்பதற்காகவே செல்லப்பா எழுத்து பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். அது