பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————சி.சு. செல்லப்பா

கைக்கொள்ளப் பட்டு வருகிற நிலையில், அந்த வாழ்க்கை சக்கரம் சரியாக சுழல பெரியோர் பெற்றோர், குணம் தரம் பார்த்து,அறிவு பூர்வமாக அந்த உறவை நிர்ணயிக்கும்.நடைமுறை இருந்து வருகிறது. அதிலிருந்து வேறுபட்டு ஆணும் பெண்ணும் தாமே குணம் பார்த்து தரம் பார்த்து, பரஸ்பரம் அறிந்து உணர்ச்சி பூர்வமாகமனம் கொடுத்து தங்கள் வாழ்க்கைத்துணைகளை தேர்ந்தெடுத்து குடும்ப அமைவது இன்னொரு நடைமுறை. முன்னதுக்கு பெற்றோர் பொறுப்பு; பின்னதுக்கு தாங்களே பொறுப்பு. பின்னதை காதல் அடிப்படையில் ஏற்பட்ட உறவு என்கிறோம். பழைய புராண, சரித்திர, இலக்கியத் துறைகளில் இதுக்கு இடம் இருந்திருப்பது தெரியும் ஆனாலும், தற்கால சமூக வாழ்வில் அதுக்கு இடம் பொருட்படுத்தத் தக்கதாக இருந்து வரவில்லை. இன்று வரையிலும் கூட அது பேசும் படியாக பாதிப்பு விளைவித்திருப்பதாகவும் சொல்வதுக்கில்லை.

இந்த நிலைமையில் நூர் உன்னிஸா வெளி வந்தது. நூர் உன்னிஸாவில் “டீன் ஏஜ்” என்கிற வளர்பருவ மயக்கம், அது நீடித்து வளர்ந்து உக்ரமாகி தாங்கள் பகுத்தறிந்து உணர்ந்த ஒரு உணர்ச்சித் தீவிரம், அதன் பயனாக அவர்கள் உறவிலே ஏற்பட்ட முடிவு ஆகியவை சேர்ந்து ஒரு சுத்தமான காதல் கதை உருவாகி இருக்கிறது. இதிலே ஏற்பட்ட சிக்கலும் புதுவிதமானது அன்றைக்கு, இந்த கதையின் உள்ளடக்கத்தை நான் சொல்வதைவிட கதையின் முடிவில் வரும் கடிதமே கலைப்பாங்குடன் சொல்லிவிடுகிறது:-

‘இக்கடிதத்தை என் வாக்காவும் அடையாளமாகவும்நீ வைத்துக் கொள்ளலாம். நாம் திருச்சியில் சிறு குழந்தைகளாக விளையாடியபோது என் மனதில் உன்னிடம் ஏற்பட்ட பற்று என்னை விட்டு இன்னும் அகலவில்லை ஏனென்றால் ஸதா உன் உருவம் சிலைபோல என் முன்நிற்கிறது. நித்திய இளமையோடு உன்னுடன் விளையாடுவது போலவே கனவு காண்கிறேன். உன்னை மற்றொரு முறை இவ்வுயிரில் பார்க்க வேண்டுமென்ற அவாவும் நிறைவேறி விட்டது. இனி என் நாட்களை பூர்வம் ஜெபுன்னி ஸாவைப் போல கழிக்கப் போகிறேன். தாயாரிடம்நீ கலியான மில்லையென்று சொன்னது எனக்கு திருப்தியைக் கொடுத்தது. இ னி மேல் நீ இன்னுமொரு ஸ்திரீயுடன் பேசாது உன் வாழ் நாட்களை என் மனத்தோடு மட்டும் லயிக்கச் செய்துகழிப்பாயானால் நானும் சோர்வின்றி வாழ்வேன். அப்படியே செய்கிறேனென்று நீ

290