பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



‘என் ஹிருதய நிலைமையை அவள் அறிவாளோ? முடியாது. பூவின் அவா மணமாக வெளியேறித் தாக்குகிறது'நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் இருதயக் கரையில் போய் மோத முடியும்' ஸாத்தியமில்லை...அக்கடிதத்தில் தன் சகோதரனைக் கருவியாகக் கொண்டு என்னையேனிங்கு வர வழைத்தாள், என்னிடத்தில் அவளுக்கோர் - அதெப்படி நான் சொல்வது?'

உணர்ச்சி சித்தரிப்பில் கு.ப.ரா. பின்னால் சிறப்பான வெளியீடு காட்டி இருப்பதுக்கு நல்ல சூசனை இந்தக் கதையில் தெரிகிறது. சம்ஸ்கிருத இலக்கியங்களில் நல்ல உள்ள அவரது நடையில் அந்த பரிச்சயம் மொழிச்சொற்கள்தக்க இடங்களில் பொருத்தமாக பயனாகி வ.வெ.க. அய்யர், சங்கு சுப்ரமண்யன் நடை போல் ஒரு கம்பீரம் அமைந்ததாக இருக்கும். அவரது நடையில் கவிதைப் பாங்கும் தொனிக்கும், 'மலரும் மணமும்' போல் சோகமாகவும் 'முள்ளும் ரோஜாவும்' போல் இன்பமாகவும் முடியாமல், நெடுகிலும் அநுபவிக்கும் வேதனையை தள்ளிக் கொடுத்து அந்த வேதனையையும் இன்பக் கனவுகளாக தம் இச்சா சக்தியால் மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இரு உள்ளங்களில் போராட்டத்தை வெளியிடும் முடிவாக இருக்கிறது. ஒரு சுத்த கலைஞனின் சுத்தமான படைப்பான இந்த கதையை நான் இன்றும் முன் போலவே ரசிக்க முடிகிறது. இதுக்குப் பின் கு.ப.ரா., வாழ்க்கையில், குடும்பத்தின், ஆண் பெண் உறவின் சிக்கல்களை போராட்டங்களை பிரச்னைகளை வைத்து பல கதைகளை எழுதி இருக்கிறார், அவரை சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக ஆக்கத்தக்க திறமை இந்த கதையிலேயே வெளித் தெரிகிறது.

மணிக்கொடியில் முதல் சிறுகதையான ‘சிறுகதை' வருமுன் வ.ரா. மணிக்கொடியின் கட்டுரைகள் 'கருவளையும் கையும்' என்ற தலைப்பில் கவிதைகள்,. பூருரவல், ஊர்வசி ஆகிய புராண பாத்திரங்களைதன் கற்பனையில் புதுசுபடுத்திய சித்தரிப்புகள் எழுதி இருந்தாலும் இந்த கதை தான்.அவரை எடுத்துக்காட்டியது. கதைக்குள் கதையாக அமையும் உத்தி முறை ராமையாவின் 'வார்ப்படம்' கதையில் கையாளப்பட்டது போன்ற ஒரு புதுவிதமானது ஆகும்.

295