பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



குலாமின் தாய் மகனைத் தேடிக் கொண்டு அங்கே வந்தாள். நான் இருப்பதைப் பார்த்து சட்டென்று பின்வாங்கி முகத்தை மூடிக் கொண்டாள்.

‘அம்மா யாரென்று எண்ணுகிறாய்? நம்ம...' என்று குலாம் ஆரம்பித்தான்.

‘எனக்கு ஞாபகமிருக்கிறது. செளக்கியமா அப்பா என்று கேட்டுக் கொண்டு மெதுவாக அந்த அம்மாள் முன்வந்தாள்.

'செளக்கியம் அம்மா.'

'எங்கே இருக்கிறாய்?'

‘திருச்சியில் இருக்கிறேன்.'

‘கலியாணம் ஆயிற்றா?

‘இல்லை.”

பேசும் பொழுதே அவ்வுருவிற்குப் பின்னால் இன்னும் ஒரு இளம் உருவம் நிழல்போல நிற்பதுபோன்ற பிரமைதட்டிற்று எனக்கு. ஒரு நிமிஷம். நூருன்னிஸாவே என்முன் தோன்றுவாளோ என்ற ஆசை. மறுநிமிஷம் 'செ. அதெப்படி முடியும், அவள் பர்தாப் பெண் அல்லவோ, குலாமும் கடிதத்தில் எழுதினதைத் தவிர நேரில் அவளைப்பற்றிய பேச்சே எடுக்கவில்லையே,' என்ற நினைப்பு ஏற்பட்டது. அவள் யோக க்ஷேமத்தைப் பற்றிக்கூட கேட்க எனக்கு யோசனையாய் இருந்தது. அவளை நிச்சயமாகப் பார்க்க முடியாதென்ற எண்ணம் ஏற்பட்ட பிறகுதான் குலாமுடன் சுய பிரக்ஞையுடன் பேசினேன்.

இரவு பத்துமணி சுமாருக்கு குலாம் படுத்துக் கொள்ளச் சென்றான். எனக்கு ஒரு தனியறை ஒழித்துத் தந்திருந்தார்கள். என் தனியறையில் தனிமையில் நான் படுக்கையில் படுத்துப் புரண்டேன். மின்சார விளக்குகள் வெளிச்சம் எனக்குத் தாங்க முடியாததாக இருந்ததால் அதை அணைத்துவிட்டு ஜன்னலைத் திறந்துவைத்தேன். அதன்வழியாகப் பூரணசந்திரன் என் படுக்கையின் மேலே தன் ஒளியைப் பரப்பினான். படுக்கையில் உட்கார்ந்து எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினேன். அதே வீட்டின் ஒரு பாகத்தில் அவளும் அப்பொழுது சஞ்சரித்துக் கொண்டிருந்தாளல்லவா?

311