உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

இதழில் வேலை பார்த்தார். 1947 முதல் 1953வரை ‘தினமணி’ நாளிதழில் சஞ்சிகைப்பகுதியின் பொறுப்பேற்று செயல்புரிந்தார். ‘தினமணி சுடர்' 'தினமணி கதிர்' என்று பெயர் மாறுவதற்கும் அவரே காரணமாக இருந்தார். கருத்து வேற்றுமையால் அவர் தினமணியிலிருந்து வெளியேறினார்.

1959ல் இலக்கிய விமர்சனத்துக்காகவும், புதிய சோதனை முயற்சிகளைப் பரப்பவும் அவர் 'எழுத்து' என்ற மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். புதுக்கவிதை வளர்ச்சி பெறுவதற்கு 'எழுத்து’ வெகுவாக உதவியது.

சி.சு. செல்லப்பா நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவற்றை, பிற்காலத்தில் அவரே தொகுத்து எழுத்து பிரசுரம் வெளியீடுகளாகப் பதிப்பித்தார். செல்லப்பா சிறுகதைகள் என்று ஏழு தொகுதிகள் வந்தன. அவை தவிர, சிறு சிறு புத்தகங்களாக கைதியின் கர்வம், செய்த கணக்கு, பந்தயம், ஒரு பழம், நீர்க்குமிழி, பழக்கவாசனை ஆகியனவும் வெளியிடப்பட்டன.

தனது சிறுகதைகள் பற்றி, 'என்சிறுகதைப் பாணி' என்ற பெரிய நூலை சி.சு. செல்லப்பா எழுதிவெளியிட்டிருக்கிறார்.

ஆங்கிலத்திலிருந்து சிறந்த சிறுகதைகள் பலவற்றையும் அவர்தமிழாக்கி பத்திரிகைகளில் பிரசுரம் செய்தார். 'எழுத்து’ காலத்தில் செல்லப்பாகவிதைகள் எழுதுவதில் ஈடுபட்டார். ‘மாற்று இதயம்' என்ற நீண்ட கவிதையும், மகாத்மா காந்தி பற்றிய 'நீ இன்று இருந்தால்' குறுங்காவியமும் நூல்களாக வந்துள்ளன.

காற்று உள்ளபோதே, ஏரிக்கரை, குறித்த நேரத்தில், எல்லாம் தெரியும் ஆகியவை அவருடைய கட்டுரைத் தொகுப்புகள், இவற்றுடன், தமிழில் சிறுகதை பிறக்கிறது. தமிழ் சிறுகதை முன்னோடிகள், இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம், ந.பிச்சமூர்த்தியின்கவிதைகள்பற்றி ‘ஊதுவத்திப்புல்’ ‘மாயத்தச்சன்’, எனது சிறுகதைப் பாணி, பி.எஸ். ராமையாவின் கதைக்களம் ஆகிய விமர்சன நூல்களும் வெளிவந்திருக்கின்றன.

செல்லப்பா நாடகத்திலும் ஆர்வம் காட்டினார். 'எழுத்து நாடக அரங்கம்’ என்ற பெயரில் ஒன்றிரு நாடகங்கள் அரங்கேற்றம் செய்தார். அப்போது, மதுரை மாவட்ட மறவர் வாழ்க்கையை அடிப்படையாக்கி

28