பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

இன்று நாம் பார்க்கிற விஷயம். அதை நினைவிலிருந்து ஒதுக்கிவிட்டு நாம் ஒரு இலக்கிய நூலை அணுக முடியாது. ஆனால அவ்விதம் பார்ப்பதில் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ளவும் தவறக் கூடாது. எனவே எழுத்து இலக்கியக் கோட்பாடுகள் தத்துவக் கோட்பாடுகள் சம்பந்தமாக திறந்த கதவாகத்தான் இருக்கும். கருத்துப் பரிமாறுதல்களின் விளைவாகத்தான் இலக்கியப் படைப்பும் ரசனையும் ஏற்படமுடியும் என்ற நம்பிக்கையை எழுத்து தன்முன் வைத்துக்கொண்டுள்ளது. எழுத்து பக்கங்களில் இந்த இதழில் காணும் வரிகளே அதற்கு சான்றாக அமைந்திருப்பதைப் பார்க்க முடியும்.

கருத்துக்களைச் சொல்வதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபித்து இருப்பதால், இலக்கியப்படைப்பு சம்பந்தமாக எழுத்து தனக்கு எல்லைக் கோடிட்டுக் கொண்டுவிடும் என்பதல்ல. சொல்லப் போனால் படைப்புதான் 'எழுத்து'க்கு முதல் அக்கறையாக இருக்கும்.

‘சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம்.’

என்று க.நா.க.தன் 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்' கட்டுரையில் கூறியுள்ளது அப்படியே 'எழுத்து' தன் குறிக்கோளாகக் கொண்டுள்ள படைப்பு லக்ஷியமாகும். சோதனை செய்து பார்ப்பவர்களால்தான் இலக்கியமே வளர்ந்திருக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கு முதல் நாவலைத் தந்த வேதநாயகம் பிள்ளையும் சிறுகதையைத்தந்த பாரதியும் வசனநடையில் புதுமைகாட்டிய வ.ரா.வும் இந்த வழிவந்த மற்ற சிலரும் சோதனைக்காரர்கள். இன்றைய இலக்கியம் பற்றிப் பேசும்போது இவர்களைத்தான்முதலில் குறிப்பிடுகிறோம். சுயமாக, தனித்தன்மையுடன் கலைஉருவம் படைத்தவர்களை அதே சுவடில் பின்பற்றி 'காப்பி' அடித்து சிருஷ்டிப்பவர்களை ரசிக உள்ளம் அவ்வளாவாக நீண்ட நாளைக்கு தன் நினைவில் இருத்திக் கொள்வதில்லை. ஆகவே இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களுக்கு களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத் தரமான எத்தகைய புதுசோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும்.

முடிவாக -

33