உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெட்டிக்கடை
நாரணன்
ந. பிச்சமூர்த்தி


தான்சாக மருந்துண்ட
தவசிகளைக் கண்டதுண்டோ?
ஊன் சாக,
உயிர் இருக்க
உலவுபவர் சித்தரன்றோ?
நான் யாரு?
சித்தனா தவசியா?
பிழைக்கச் சொத்தெதுவும்
பாட்டனோ வைக்கவில்லை;
அழைத்து வித்தை ஏதும்
அப்பனோ புகட்ட வில்லை.
அதற்காக
ஆண்டவன் கொடுத்த மூளை
அடுப்படிப் பூனையாமா?

நீண்ட விழியாள் துணையால்
குங்குமத்தைத்தண்ணீரோடு
குலுக்கிக் கலர்கள் செய்தேன்;
தயங்காமல் உப்பைப்போட்டு
தனியான சோடா செய்தேன்.


சிறுகதைகள், 'பிக்ஷு' என்ற புனைபெயரில் கவிதைகள், 'ரேவதி' என்ற புனைபெயரில் இலக்கியக் கட்டுரைகள் சென்ற கால நூற்றாண்டு காலமாக எழுதிவரும், முன் வரிசைப் படைப்பாளிகளில் ஒருவரான பிச்சமூர்த்தி தஞ்சை ஜில்லாவில் 1900ல் கும்பகோணத்தில் பிறந்தவர். 'பதினெட்டாம் பெருக்கு' 'மோஹினி' 'ஜம்பரும் வேஷ்டியும்' சிறுகதைத் தொகுதிகளும் 'காவி' என்ற நாடகமும் அவருடையவை வெளியாகி இருக்கின்றன. 'மாயமான்' என்ற நாடகமும் வசன கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பும் வர இருக்கிறது. தற்போது சென்னையில் நவ இந்தியா' தினசரியில் உதவி ஆசிரியராக இருக்கிறார்.


37