பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

அற்புத உருவம் பெற்று, ஆழமும் அர்த்தமும் கூடித் திகழ்கின்றன.

ந. சிதம்பரசுப்ரமணியன் என்பவருக்குச் சிறுகதையில் உருவம் என்கிறதில் நம்பிக்கை கிடையாது. ஆகவே அவருடைய சிறு கதைகளைச் சோதனைகளாகக் கருத முடியாது. ஆனால் அவற்றிலே ஒரு அற்புதமான உருவம், ஆரம்பமும், நடுவும், முடிவும் அமைகின்றன என்பது படிப்பவர்களுக்குத் தெரியும். இதுபோல தமிழில் சிறந்த சிறுகதைத் தொகுதியில் இடம் பெறக் கூடிய ஆசிரியர்கள் என்று மணிக்கொடி கோஷ்டியினரில் வேறு பலரையும் சொல்லலாம். அவர்கள் திறமைக்கேற்ப சோதனைகள் செய்து பார்த்தவர்கள்.சி.சு.செல்லப்பா,க.நா.சுப்ரமண்யம்,சுந்தா, கி.ரா. - எம்.வி.வெங்கடராமன், முதலானோர். செல்லப்பாவின் ஆரம்ப காலக் கதைகள் ஒருவிதமானவை, பிற்காலத்தில் அவர் எழுதியுள்ள சிறுகதைகளில் கொஞ்சம் கனமான பகைப்புலமும், லேசான விஷயமும் அடங்கியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். கி.ரா.வின் சிறுகதைகளைப் பாடப்புஸ்தகச் சிறுகதைகள் என்றே சொல்லலாம். அவற்றில் ஆழமோகனமோ அதிகம் கிடையாது; ஆனால் உருவம் உண்டு. சற்றேறக்குறைய பத்திரிகைத் தரத்தைத் தொடுகிறமாதிரிக் கதைகள் அவருடையவை என்றாலும் இலக்கிய முயற்சிகள் தான். சுந்தாமணிக்கொடி கோஷ்டியில் இலக்கியாசிரியராகத்தொடங்கி பத்திரிகை எழுத்தாளராக முடிந்தவர். இவருடைய ஆரம்ப காலக் கதைகளில் சில நல்ல சோதனைகள். க.நா. சுப்ரமண்யத்தின் மணிக்கொடிக் கதைகளில் உருவப் பிரக்ஞையுடன், ஆழந்தெரியச் செய்யப்படும் முயற்சிகள் அதிகம். வெற்றி பெற்ற ஒரேகதை என்று சாவித்திரி என்பதைச் சொல்லலாம். இவருடைய பிற்காலத்துச் சிறுகதைகளில் சோதனை அம்சம் அதிகம். எம்.வி. வெங்கடராமன் பழங்கதைகளை அற்புதமான புதுமெருகுடன் எழுதியிருக்கிறார். சிறுகதைகளாக அவற்றிற்கு ஒரு இலக்கியத்தரம் உண்டென்றாலும் கூட, அவை பழங்கதைகளின் புது மெருகுதான்.

மணிக்கொடி கோஷ்டியைச் சேராத சிறுகதாசிரியர்களும் சிலர் அந்தக் காலத்தில் எழுதத் தான் எழுதினார்கள். இவர்களில் தி.ஜ.ரங்கநாதனையும், த.நா. குமராஸ்வாமியையும், சங்கரராமையும்

53