பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விண்ணும் மண்ணும்



— வாழ்வும் பயனும் —
ந. சிதம்பர சுப்ரமண்யன்

இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்த கதைதான். சிவபெருமானின் திருநீலகண்டத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்த நாகம், விஷ்ணுவின் வாகனமான கருடாழ்வானைப் பார்த்து ‘அப்பா கருடா, செளக்யமா என்றதாம்.

கருடன் பதில் சொல்லிற்றாம், “அப்பா நாகேசா இருக்கிற இடத்தில் இருந்தால் எல்லோரும் செளக்யந்தான்” என்று. வாழ்விலே நாம் நன்கு ஆராய்ந்தறிய வேண்யடிதொரு தத்துவத்தைக் காணலாம் இந்தக் கதையிலே.

சிவபிரான் கழுத்தில் இல்லாமல் நாகம் கீழே ஊர்ந்துகொண்டிருந்தால், நடந்திருக்கவேண்டிய நாடகம் வேறு. ஆனால் சிவபிரான்கழுததில் நாகத்தின்நிலை வேறு. வேறு இடத்தில் இருக்கும்பொழுது அதன் நிலை வேறு. நிலை மாறும் பொழுது தன்மை மாறிவிடுகிறது.

விக்கிரமாதித்தன் சிம்மாசனம் கண்டுபிடிக்கப்பட்ட கதை இருக்கிறதே. அதுவும் இத்தன்மையதுதான். பயிற்கொல்லையில் மேடைமீதிலிருக்கும் பிராமணன், அங்கு வந்து கொண்டிருக்கும் போஜராஜன் படைகளை அன்போடு உபசரிக்கிறான். ஆனால் மேட்டிலிருந்து கீழிறிங்கி வந்ததும் அவன் தன்மையும் கீழிறங்கி விடுகிறது. பயிர்கள் வீணாகி விடுமென்று, வந்த ஜனங்களை, விரட்டியடிக்கிறான். அரியாசனத்தில் (மண் மூடியிருந்தாலும்) இருக்கும்பொழுது அரசன்தன்மையும்மண்ணை மிதித்ததும் சாதாரண மனிதன் தன்மையும் வந்துவிடுகிறது. இது இயற்கையே.

ஒவ்வொரு நிலையில் இருக்கும்பொழுது ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மையும் மதிப்பும் இருக்கிறது. அந்த நிலை மாறும் பொழுது தன்மைகளும் நிலைகளும் மாறிவிடுகின்றன. விலையுயர்ந்த வைரம் ஒன்று கையிலிருக்கிறது. அதை விற்க வேண்டும். அழுக்குப் படிந்த ஆடைகளை அணிந்துகொண்டு,

79