பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

வளைத்துவிடுவான் பேர்வழி. பெரிய மனிதனுக்கு நல்ல இலக்கணம் கண்டு பிடித்தீர்கள் ஐயா என்றேன் ஆத்திரத்தோடு.

“அப்படியா எனக்குத் தெரியவில்லையே’ என்று திகைத்தார் நண்பர்.

மனிதனைப் பொருளோடு வைத்து மதிப்பிடுவதுதான் உலக இயல்பென்பதைப் பார்த்தோம். ஆனால், இதிலும் கூட அனேக சிக்கல்கள் வந்து விடுகின்றன. நிலைமாறும் போது மாறும் மதிப்பைப்பற்றிக் கவனித்தோம். நிலை ஒன்றாகவே இருந்தாலும் பார்க்கும் முறையில் சிறு வித்யாசங்கள் ஏற்படும்பொழுது அந்த மதிப்பு வெவ்வேறாகி விடுகின்றது.

ஒவ்வொரு பொருளுக்கும் பல மதிப்புக்கள் இருக்கின்றன. நிலைமாறாவிட்டாலும் அந்த பல தரப்பட்ட மதிப்புக்குட்பட்டே யிருக்கின்றன. இவைகளுக்கு intrinsic Value சுபாவ மதிப்பு-Face Value தோற்ற மதிப்பு-Market Value விலைபோடும் மதிப்பு -Breakup-value பின்ன மதிப்பு என்று பலவிதங்களில் அதைப் பாகுபாடு செய்திருக்கிறார்கள்.

வடபழனியில் என் வீடு இருக்கிறது. அதைப் புதுப்பித்திருக்கிறேன். ஒருநண்பர் வீட்டிற்கு வந்தார். வீட்டைப் பார்த்தார். ‘பேஷ், வீட்டை மிகவும் வசதியாகக் கட்டிவிட்டீர்களே. எவ்வளவு ஆயிருக்கிறது’ என்று கேட்டார் நண்பர். ‘ஐம்பதாயிரம் இழுத்து விட்டது’ என்கிறேன்.

‘அடேயப்பா ரொம்ப ஜாஸ்தியாயிருக்கே. ஏன் அவ்வளவு ஆயிருக்கிறது? இந்தத் தொகைக்கு நல்ல பங்களா மாம்பலத்தில் வாங்கியிருக்கலாமே.'

“பழய வீடாயிருந்தது; கையை வைக்கவும் மேலும் மேலும் விழுங்கி மிகவும் சாப்பிட்டு விட்டது. புதிய வீடு கட்டுவது சுலபம். நான் பழய வீட்டைப் பிரித்துக்கட்ட ஆரம்பித்ததும் என்னை யறியாமலேயே அதிகம் ஆய்விட்டது.” என்றேன்.

‘நீங்கள் விற்க ஆரம்பித்தால் அந்தத் தொகை கிடைக்குமா”

என்று கேட்டார் நண்பர்.

84