பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

நான் ஒன்றும் சொல்லத் தெரியாமல் விழிக்கிறேன். நான் வீட்டிற்குச் செலவழித்த தொகை தான் என் வீட்டிற்கு விலை அதன் சுபாவ விலை (intrinsic). ஆனால், அதை வாங்க முன் வருபவர்கள் எனக்கு என்ன செலவாயிற்று என்று கவலைப் படப்போவதில்லை. வீடு எத்தனைபெறும் என்றுதான் கணக்கிட்டுப் பார்ப்பார்கள். அந்த வட்டாரத்தில் நிலத்திற்குள்ள சராசரி விலையை விசாரிப்பார்கள். கட்டடத்தின் அகலம் நீளம் என்ன, எப்படிக்கட்டப் பட்டிருக்கிறது. அதற்கு வரக்கூடிய வாடகை எவ்வளவு, எப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறது. இவைகளையெல்லாம் விசாரித்து அவர்கள் மதிப்புப்போடுவார்கள். இவர்கள் போடும் மதிப்பு நாற்பதாயிரம் என்று வைத்துக் கொள்வோம். இதுதான் விலைபோகும் மார்க்கெட் மதிப்பு (Market Value). ஆனால் வீட்டின் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் நான் பழைய வீட்டை என்ன விலைக்கு வாங்கிகினேனோ, அந்த விலைதான் இருக்குமே தவிர, நான்பிரித்துக் கட்டின தொகை இருக்காது. புது வீட்டின் தஸ்தாவேஜும் பழைய விலையைத் தான் காட்டும். அதுவே, முகமதிப்பு (Face Value) என்று சொல்லலாம்.

இந்தப் புது வீட்டைப் பிரித்து, ஜன்னல்கள், கதவுகள், ஓடுகள், உத்தரங்கள், செங்கல்கள் இப்படியாகத் தனித்தனியாக விற்பதனால் என்ன கிடைக்குமோ அதுவே பின்ன மதிப்பு (Break up Value) பைத்யக்காரத்தனமாகத் தோன்றினாலும், விற்க முடியாத, கிராமத்திலிருக்கும் சில வீடுகளை விற்பதற்கு இது சிறந்த முறையாகவும் லாபகரமான முறையாகவும் ஆகிவிடுவதை சில விசித்திரமான இடங்களில் பார்க்கலாம்.

மற்றொன்றையும் பார்த்துவிடலாம். என் பக்கத்து வீட்டை, ஒரு பெரிய அச்சாபீஸ் முதலாளி வாங்கியிருக்கிறார். அது அவருக்குப் போதவில்லை. பெரிய யந்திரங்கள் வைக்கவும், கடுதாசி வாங்கி சேமித்து வைக்கவும், காரியலாயத்திற்கும், என் வீடும் இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும். தொழில் நன்கு அபிவிருத்தி செய்ய செளகரியமாயிருக்கும். என் வீட்டை அவர் விலைக்கு வாங்க முடியுமா என்று நோட்டம் பார்க்கிறார். ஒரு மனிதர் மூலம் விசாரித்துப் பார்க்கிறார். நான் அசிரத்தையாகச் சொல்கிறேன். “நான்எதற்காக ஐயா இதை விற்கப் போகிறேன். விற்பதற்காகவா இவ்வளவு சிரமப் பட்டு என் இஷ்டத்திற்குக் கட்டியிருக்கிறேன்.

85