பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல்வாரத்தில் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு வருகிறார். வரும் வழியிலேயே இதயநோய்நா.பாவை தாக்குகிறது. வீட்டிற்கு தகவல் அனுப்பப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் அவரது மருமகன், மகள், குடும்பத்தினர் எதிர் கொண்டு அழைத்து வந்து, வரும் வழியில்கத்திப்பாரா.அருகிலுள்ளபாலாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவ மனையில் நானும் சென்று பார்த்தேன். இடியாப்பம் சர்ப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் வாங்கிச் சென்ற ஆப்பிலை சிறியதாக பொடியாக்கி சிறிது சாப்பிட்டார். ஒருவாரத்தில் நன்கு குணமாகி வீடு திரும்பினார். - 12-12-87 காஞ்சிபுரம் சென்று விட்டேன். 13-12-87 ஞாயிறு மாலை சென்னை திரும்பும்போது வீட்டிற்கு வரும் வழியில் இரவு 8 மணி டி.வி.செய்தியில் நா.பா.மாரடைப்பால் மறைவுசெய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். மறுநாள் காலை வீட்டிற்குச் சென்று துன்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இடுகாட்டில் சிறிய இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது தீபம் வாசகர் வட்டம் துவக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு ஞானியாரடிகள் தமிழ் மன்றம் சார்பில் வருடா வருடம் அவர் மறைவு தினத்தில் கூட்டம் நடைபெற்றது. . - நா.பார்த்தசாரதி மறைவுச் செய்தியை அறிந்து தலைவர் கலைஞர் 15-12-87 அன்று முரசொலியில் கீழ் கண்ட இரங்க்ல் செய்திபதிவு செய்யப்பட்டுள்ளது. தீபம் பார்த்த சாரதி மறைவு குறித்து கடலூரிலிருந்து தலைவர் கலைஞர் அனுப்பியுள்ள இரங்கல் செய்தி:- - - இறந்த எழுத்தாளரும் கவிஞருமான எனது நண்பர் தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள் திடீரென இயற்கையெய்திய செய்தி கண்டு அதிர்ச்சியுற்றேன். - - - அரசியல்துறையில் எனக்கும், அவருக்கும், பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இலக்கியத்துறையில், எழுத்துத் துறையில் நாங்கள் ஒருவரையொருவர் இதயமார நேசித்தோம். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் மட்டு மின்றி தனித்து உரையாடி மகிழ்ந்தவர்கள். கடித வாயிலாக தொடர்புகொண்டு தோழமையை வளர்த்தவர்கள், - அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிற்கு சென்று திரும்பிய பிறகு ஆராய்ச்சி கருத்தரங்கில் கலந்துகொள்ள இரண்டுநாட்களுக்குப்பிறகு மலேசியா சென்றார்.