பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற சரித்திர நாவல் தினமணி சித்துருக்கு மாற்றியதில் வெளிவராமல் தொலைந்து போய்விட்டது. அந்த கதையை படித்த ஒரே வாசகன் நான் தான்.இன்னும் அந்தக்கதை என் நினைவில் உள்ளது. சரித்திர ஆதாரமில்லாத சரித்திரக் காலக் கதை. இரண்டு அரச குமார்கள் சிறுவயதிலேயே சதிகாரர்களின் சதியால் பிரிந்துவிடுவார்கள். பின்னர் வயதுவந்த நிலையில் சந்திப்பார்கள். நாட்டையும் மீட்பார்கள். நாவல் தொலைந்து போன வருத்தம் இருந்திருக்கும். ஆனால் மற்றக் கதைகளின் பிரகரத்தில் அந்தக் கவலையை மறந்திருக்கலாம். அப்போது அதற்கு வேறு பிரதியும் எழுதி வைத்துக் கொள்ள வசதி இல்லை. நான் அவரிடம் சென்ற பிறகு எல்லாக்கதையையும் பிரதி எடுத்துக் கொண்டுதான் பத்திரிகைக்கு அனுப்புவோம். மணிபல்லவம் நூல் காபி செய்த பிரதியை பலநாள்வைத்திருந்தோம் நூல் அச்சில்வந்தபின்புதான் அதை எடைக்குப் போட்டோம். - மதுரையில் அவருக்குப் பழக்கமான ஒரு பிரசில் தான் அவர் கதைகள் வெளிவந்த இதழ்களை - முழு இதழ்களையுமே பைன்ட் செய்து வைத்துக் கொள்வார். அப்படி அவர் வீட்டில் காவேரிபைன்டிங், உமா பைன்டிங், கலாவல்லி, பம்பாயிலிருந்து வெளிவந்த விந்தியா பைன்டிங் என நிறைய பைன்டிங்குகள் இருந்தன. பின்னர் அவைகளை நூலாக வெளியிடும் போது அந்த . பைன்டிங்குகளை பிரித்துஅவர்கதைப் பகுதியை மட்டும் எடுத்துக் > கொன்டோம். - - அவர் தினமும் டைரி எழுதும் பழக்க முடையவர். அவருக்கு அப்போது டைரி இலவசமாக கிடைக்காது. அதனால் ஹோ அன்ட்-கோ டைரியை விலைக்கு வாங்கிவிடுவார். அப்படி அவரிடத்தில் பல வருட டைரிகளைப் பார்த்துள்ளேன். அவைகள் பாதுக்காக்க பட்டிருந்தால் நாபாவின் டைரிக்கென்றே ஒரு நூல் வெளியிட்டிருக்கலாம். சொற்பொழிவுக்கு அழைப்புக்கடிதம் வந்து அந்த நிகழ்ச்சி உறுதியானால், அந்த தேதியில் மாயவரத்தில் சொற்பொழிவு என்று குறித்து வைத்துக் கொள்வார். சொற்பொழிவுக்கு பெரும்பாலும் ஏற்பாட்டாளர்களே தலைப்புக் கொடுத்துவிடுவார்கள். சில இடங்களில்அவரையே தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சொல்லிவிடுவ பெரும்பாலும் அவைகள்- பாரதியைப்பற்றியதாகவே இருக்கும்.