பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் ‘தீபம்" 프 பார்த்தசாரதி ! தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் தன்மானமுள்ள தீரர்கள் நீடிப்பது அருமை என்பது என் அனுபவம். மாட்டுக் கொட்டத் தினுள் சிங்கங்களைக் கட்டிப் போட முடியாது. இதனால் சிங்கங்கள் கொடுமைப்படுத்தும் என்பது பொருளல்ல. மாட்டுக் கொட்டம் சிங்கவாசத்துக்கு தகுந்த இடமல்ல என்ப்தே பொருள். இதுவரை முன்னுரை. இனிமேல் தான் தமிழ்ப் பத்திரிகைத் தொழிலில் ஒர் தன்மானமுள்ள எழுத்தாளன் பட நேரும் துன்பங்களைச் சொல்ல வேண்டும். சுதந்திரமான போக்குள்ள தரமான எழத்தாளர்களின் நியாயமான சிந்தனை ஒளியைத் தமிழ் மக்களுக்கு அளிப்பற்காக நான் தீபம் - ஏற்றும் இந்தச் சமயத்தில் தமிழ்ப் பத்திரிகைத் தொழிலில் அறிவு பலத்திற்கும்-பணபலத்திற்குமுள்ள-பகை -போட்டிகள் பற்றிக்கொஞ்சம்சுவாரஸ்யமாகவும்-விரிவாகவும் ஆராய ஆசைப்படுகிறேன். -தமிழ்ப்பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் இருந்து உத்தியோகம் பார்ப்பதிலுள்ள கஷ்டங்கள் பற்றி முன்பு ஒரு முறை தோழர் ஜெயகாந்தன் என்னிடம் கூறியதை இப்போது நினைவு கூர்கிறேன். நான் அதை நினைவு கூரும்போது என்சிந்தனை இன்னும் வளர்கிறது. சம்பளத்திற்கு விலை உழைப்பு-உழைப்பிற்கு மேல் விசுவாசத்தையும் சேர்த்து உங்களிடம் எதிர்பார்ப்பவர்கள்-விசுவாசத்தைப்பெற யோக்கியதை இல்லாத முதலாளிகள். சுதந்திர நோக்கும் தன்மானம் காரண மான பகைமையும் முதலில் இங்கே தான் ஆரம்பமாவது வழக்கம். விசுவாசத்தை-விசுவாசத்தினால்தான்பதிலாகப் பெற முடியும் என்பதை மறந்து-உழைப்பையும் விசுவாசத்தையும் - வெறும் சம்பளம் என்ற ஒரே விலைக்கு - அளவிற்குன்றிய விலைக்கு வாங்கிவிடப் பார்க்கிறார்கள். சிலர் பிழைப்புக் காரணமாகச் சகலத்தையும் குறைந்த விலைக்கே விற்று விடலாம். எல்லாரும் அப்படிச் செய்துவிட முடியுமா... பணமும் அதிகாரமும், ஆணவமும், ஆஷாடபூதித்தனுமுமே பெருமைக்குரிய பொருள்களாக நினைக்கப் படுமானால் நிஜமான புத்தியும் திறமையும் தன்மானம் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்..... எழுத்தாளர்களின் பத்திரிகைச் சுதந்திரம், பத்திரிகை தர்மம் என்றெல்லாம் தங்களுக்கு வேண்டிய தலைவர்களைக் கொண்டு மேடைகளிலும், தலையங்கங்களிலும் முழக்கி வரும் பத்திரிக்கை முதலாளிகள்பத்திரிகைகளில் பணிபுரியும் எழுத்தாளர்களின் எழுத்து