பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( வல்லிக்கண்ணன் H - (79) சுதந்திரத்தையோ, அபிப்ராய சுதந்திரத்தையோ, அப்படிக் குறிப்பிடுவதாக நினைத்தால் அது தவறு. தங்களுக்கு வேண்டிய தொழில் சுதந்திரத்தினையோ, அல்லது தாங்கள் நினைத்தபடி தங்கள் பத்திரிகைகளில் தங்களுக்கு தலையாட்டுகிறவர்களை வைத்துக் கொள்வதையும், மற்றவர்களை வெளியேற்றி விடுவதையும் தங்கள் அதிகார எல்லைக்குள் வைத்துக் கொள் வதையோதான்.அவர்கள்பத்திரிகைச்சுதந்திரம்என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். - அதிகம் செலவாகும் எந்தப் பத்திரிகைக்கும் / எந்த எழுத்தாளனும் ஆசிரியனில்லை. அந்தந்தப் பத்திரிகையின் முதலாளியோஅல்லது முதலாளியின்மகனோ, மாப்பிள்ளையோ தான் ஆசிரியனாக இருக்க முடியும். கிராம முன்சீப், கர்ணம் உத்தியோகம் மாதிரி இதுவும் ஒரு பாரம்பரியப் பதவியாகி விட்டது. அதனால் புத்தியின் பலமும் நவ நவமான இலக்கியச் சோதனைகளை நடத்த வேண்டுமென்ற ஆர்வமுமுள்ள எந்தப் புதிய தலைமுறை எழுத்தாளனும் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவாகிய அம்மாதிரி கூட்டத்தில் போய்ச் சிக்கிக் கொள்ளவே கூடாது என்று தோன்றுகிறது. பணம் ஒன்றைத் தவிர வேறு யோக்கியதை எதுவுமில்லாத பத்திரிகை முதலாளிகள் - அந்தந்தப் பத்திரிகைக்கு முதலாளியாயிருப்பதோடு - ஆசிரிய னென்று பேர் போட்டுக் கொள்வதற்கும் ஆசைப்படுவதில் வியப்பில்லை. எழுத்தைப் பற்றி எடை போடும் திறனும் நாட்டின் இலக்கியச் சூழ்நிலையை அறிந்து செயல்படும் சீரும் உள்ள ஓர் இலக்கிய ஆசிரியனுடைய பொறுப்பில் பத்திரிகை இருக்குமானால் அவன் எத்தனை எத்தனையோ மகத்தான இலக்கிய சாதனைகளைச் சாதிக்க முடியும். ஆனால் தமிழ் நாட்டில் இன்று அப்படி இல்லை. விளம்பர மானேஜராகவும் சர்க்குலேஷன்மானேஜராகவும் உள்ள வியாபாரப் பேர்வழிகள் பத்திரிகைகளை ஆளுவதால், பத்திரிகைகளில் பெரும் பெரும் பணத் திமிங்கலங்களின் அட்டைப் படங்களும், சினிமா ராணிகள் மேலாக்குப் போடுகிற அல்லது போடாத நாகரிக மோஸ்தர்களைப் பற்றிய வர்ணனை விவரங்களுமே வெளிவருகின்றன. எனக்குத் தெரிந்த மட்டும் தமிழ்ப் பத்திரிகைகள் நடைபெறும் 'சீரைப் பற்றி நினைத்தால் மானக்கேடாகவ்ே