பக்கம்:ஏலக்காய்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

ஆண்டொன்றுக்கு 150 செ.மீ. அளவு மழை பெய்தாலே போதும்; போதுமானதும்கூட.!

நிழல் சீரமைப்பும் முக்கியமான பங்கை ஏற்றுக் கொள்கிறது!—விவசாய நிலப்பகுதிகளில் சீரான நிழல் ஏலச்செடிகளை வரவேற்றால்தான், ஆதாயமான மகசூல் ஏலவிவசாயிகளை வரவேற்க இயலும். காட்டு மரங்களின் நிழல் அடர்த்தியாக இருக்கும் பட்சத்தில், மரங்களின் கிளைகளையும் கொம்புகளையும் வெட்டிச்சீவி நிழலைச் சீராக்கிவிடலாம். நிழல் போதவில்லை என்றாலோ, நிழல் தரும் இனத்தைச் சார்ந்த மரங்களை நட்டு வளர்த்து நிழலின் அமைப்பினைத் தேவைக்கு ஏற்றபடி சீர்படுத்திக் கொள்ளலாம்.

ஏலச் சாகுபடியில் காடுகள் முக்கியமான பங்கை ஏற்கும்.

காடுகள் அழிக்கப்பட்டால், இயற்கையின் தட்பவெப்ப நிலை மாறும்!

காடுகளின் வளர்ப்பு, உலகத்தின் சமாதானத் தலைவியாகத் திகழ்ந்த அமரர் பிரதமர் இந்திராகாந்தியின் இருபது அம்சத்திட்டத்தில் சீரிய இடத்தைப் பெற்றுள்ளது!


உரங்கள் இதோ!

ஏலக்காய்ச் சாகுபடி பயன் உள்ளதாகவும் பயன் அளிப்பதாகவும் அமைவதில், விளைநிலத்தின் மண்வளம் இன்றியமையாத பங்குப் பணியினை ஏற்கிறது என்பது குறிக்கத்தக்க செய்தியாகவே அமைகின்றது!—மண்ணிலே பொதிந்திருக்கும் ஊட்டச் சத்துக்கள்தாம் செடிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கான ஊட்டச் சத்துக்களாகவும் பயன்படுகின்றன; பயன் தருகின்றன. சாகுபடி வளர்ச்சி அடைவதற்கு, மண்ணிலே தேவையான உரச்சத்துக்கள் தேவையான அளவுகளில் கலந்து இருக்கவேண்டும் என்பது விஞ்ஞான பூர்வமான, நவீன வேளாண்மைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/24&oldid=505924" இலிருந்து மீள்விக்கப்பட்டது