உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

மேலும், அடிநிலத் தண்டுகளைத் தாக்கும் அந்துப் பூச்சிகள், வேர்த்துளைப்பான் கிருமிகள் மற்றும் கம்பளிப் புழுக்களும் ஏலச் செடிகளின் நாசத்தில் பங்கு பற்றும் .

'பி.எச் சி.' மருந்தை 0.2 % அளவிலோ, அல்லது, 'ஆல்ட்ரின்' கலவையை 0.1 % வீதத்திலோ பிரயோகம் செய்யலாம்.


செடிப் பேன்கள்!

செடிப்பேன்கள் (Apids) என்னும் தொற்று நோய் துண்மங்கள் செடிகளின் ஜீவரசத்தைக் குடித்து சேதப்படுத்தும். 'கட்டே' நோய்க்கு இவைதாம் மூல ஆதாரம், என்பது நினைவிற்குரிய எச்சரிக்கைக் குறிப்பு ஆகும். பரிந்துரைக்கப்பட்ட 'டிமிதொட்டே-ரோகார் போன்ற முறையான பூச்சி மருந்தை 0.05 சதவீத அளவில் கலந்து தெளிப்பது அவசியம்.

மிகமிக நுட்பமான நூற்புழு இனத்தைச் சார்ந்த புதிய வகை நுண்கிருமிகளுக்கும் ஏலச் செடிகளை அழுகச்செய்து நாசப்படுத்துவதில் பெருத்த பங்கு கிடைக்கும். ஹெக்டருக்கு 10 கிலோ என்னும் வீத அளவில் 'டெமிக் 10 ஜி' என்னும் கிருமிக் கொல்லி ரசாயன மருந்துத்துளைச் செடிகளின் அடி வேர்ப்புறங்களில் துரவி, இந்த நச்சுப் புழுக்களை நாசப்படுத்திவிடலாம்!

இப்படிப் பல்வேறு நச்சுப்பூச்சி மற்றும் புழுக்கள் ஏலத் தோட்டப் பண்ணைகளை பல்வேறு காலங்களில் பல்வேறு நிலைகளில் சேதப்படுத்தி வருகின்றன. -

அறிவியல் பூர்வமான விஞ்ஞான முறைகள் மேற் கண்ட நோய்களைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளாகச் சிபாரிசு செய்யப்படுகின்றன. அந்த முறைகளைப் பின்பற்றி நச்சு நோய்களை அடக்கி ஒடுக்குவதிலும் ஏல விவசாயிகள் அக்கறையுடன் செயற்படவேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/50&oldid=505956" இலிருந்து மீள்விக்கப்பட்டது