உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

களில் பூச்சி மருந்துகளை சீராகவும் மிதமாகவும் பயன் படுத்துவதிலும் ஏல விவசாயிகள் எச்சரிக்கையோடு நடந்து, கொள்வதும் நல்லது!

காலம் காலமாகவே வரலாற்றில் உயிர் வாழ்ந்து வரும் இந்திய நாடு, வாசனைத் திரவியங்களின் தாய் நிலமாக உலக அரங்கத்தில் விளங்கி வருகிறது. அதுபோலவே, அந்நாட்களில் அரண்மனைகளிலே விலை மதிப்புக் கொண்டனவாக மதிக்கப்பட்டு வந்த நவரத்தினங்களைப் போலவே, இந்திய நறுமணப் பொருட்களும் உயர்வோடும் உன்னதத்தோடும் கருதப்பட்டன! அவை, பலவிதமான உணவுகளின் பலவிதமான தயாரிப்புக்களிலும், மருந்துகளின் பக்குவங்களிலும் பயன்படுத்தப்பட்டுச் செல்வாக்குப் பெற்றிருந்த காலம் ஒன்று நிலவியதும் உண்மைதான்!

கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரள நாடுகளில் பரந்து விரிந்திருந்த மேற்குமலைத் தொடர்ச்சிகள், எழுபதுக்கும் அதிகமான வாசனைத் திரவியப் பொருட் களின் தாய்வீடாக அன்றும் இருந்தன; இன்றும் இருக்கின்றன.

மேலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, வாசனைப் பொருட்களின் வெளிநாட்டு வாணிபத்திலும் இந்திய நாடு முதன்மை பெற்றுத் திகழ்ந்தது! தவிரவும், ஐயாயிரம் ஆண்டுக் காலத்திற்கு முன்பாகவே இந்திய நாட்டின் நறுமண விளைபொருட்கள் மத்தியக்கிழக்கு நாடுகளிலே புழங்கப்பட்டு வந்தன என்பதும் உண்மைதான்!

இந்தியா மேற்கொண்டிருந்த சர்வதேச வாணிபத்தில் அங்கம் வகித்த பல்வேறு வாசனைத் திரவியங்களுக்கு மத்தியில், வாசனைப் பொருட்களின் ராணியென மாட்சிமை பெற்றிருந்த ஏலக்காய்தான் முதன்மை, பெற்று விளங்கியது. இந்நிலையில், அரேபியக் கலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/59&oldid=505969" இலிருந்து மீள்விக்கப்பட்டது