பக்கம்:ஏலக்காய்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏலக்காய் அந்தஸ்து!


இந்திய ஏலக்காய் ராணியின் ராஜமரியாதையில், ஐயாயிரம் ஆண்டுகளின் வரலாற்றுச் சிறப்பு இன்றைய நிலையிலும் உலகின் அரங்கிலே கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

பாரதத் திருநாட்டின் புராதனச் சிற்பங்களிலும், வேதங்களிலும் புனிதமாகப் புகழ் மணம் பரப்பும் ஏலக்காய், உள்நாட்டின் மருத்துவ முறையிலும் சரி, மருந்துகளின் தயாரிப்பு நெறியிலும் சரி, கி. மு. 3000 முதல் இன்றியமையாததோர் இடத்தைப் பெற்று வருகிறது.

பால் உணர்வுகளைத் துாண்டவல்ல சக்தி ஏலக்காய்க்கு உள்ளதும் உண்மை!


தமிழ் இலக்கியத்தில் ஏலக்காய்

சங்கம் வளர்த்த தேமதுரத் தமிழின் சங்ககாலப் பேரிலக்கியங்களிலும் ஐம்பெருங்காப்பியங்களிலும் வேறு பல இலக்கியச் சிறப்பு மிக்க நூல்களிலும் ஏலக்காயின் இனிய நறுமணமும் அழகான இன்சுவையும் பரவியும் விரவியும் கிடக்கின்றன!


ஏலச்,சாகுபடிப் பரப்பு இந்தியத் தாய்நாட்டின் வாசனைத் திரவியப் பொருட்களின் ராணியாகவே ஏற்றிப் போற்றப்படும் சிறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/61&oldid=506019" இலிருந்து மீள்விக்கப்பட்டது