உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அந்நாளில் இயற்கையின் இனிமைமிக்க, சீரான தட்ப வெப்பச் சூழலில் மிதமான ஈரப்பதம் சூழ்ந்திட இயற்கையாகவே வளர்ந்து வந்த ஏலச்செடிகள் நாளடைவில் சாகுபடி முறையின் கீழ் பயிர் செய்யப்பட்டு, இப்போது ஆதாயமானதொரு பயிர்த் தொழிலாகவும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

ஏலக்காய் வாரியம் 1966-ல் அமைக்கப்படுவதற்கு, முன்னர் ஏலக்காயின் விளைச்சல் மற்றும் விவசாயம் பற்றிய உண்மையான, ஆதாரபூர்வமான மதிப்பீடுகள் எதுவுமே சரிவரத் தெரிந்திருக்கவில்லைதான்!


விலை மதிப்பு கூடுதல்

வாசனைத் திரவியங்களின் உலகத்திலே ஏலக்காய் தான் ராணி!

உலகத்தின் ஏலக்காய் ராஜ்யத்தில் இந்திய ஏலக்காய் தான் ராணி!

இவ்வாறு, இந்திய நாட்டிலும் சரி, கடல்கடந்த அயல் நாடுகளிலும் சீரும் செல்வாக்கும் பெற்ற இந்திய ஏலக்காய் உலக நாடுகளின் மேலான வரவேற்பைச் சம்பாதித்துக் கொண்டிருப்பதன் நற்பலனாகவே, இந்திய நாட்டுக்கு ரூ 30 கோடிக்கும் கூடுதலான அந்நியச் செலாவணி வருவாய் ஆண்டுதோறும் கிடைத்து வருகிறது.

விலை மதிப்பு மிக்கது. ஏலக்காய்! ஆகவேதான், ஏலக்காயின் சராசரி விலை, கிலோவுக்கு ரூ 150 என்ற அளவிற்குக் குறைவு படாமலும் ரூ 400 என்னும் விலை வீதத்துக்கு மேற்படாமலும் நிலவி வருகிறது.

இந்திய ஏலக்காய், அதாவது, இந்திய நாட்டின் சிறிய ரக ஏலக்காய்தான் உலக அரங்கிலே எத்தனை எத்தனை வழிகளிலும் வகைகளிலும் பயன்படுகிறது!–பயன்படுத்தப்படுகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/65&oldid=505975" இலிருந்து மீள்விக்கப்பட்டது