பக்கம்:ஏலக்காய்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கேரளத்தில் மயிலாடும்பாறையில் வெற்றிகரமாக இயங்கியும் இயக்கப்பட்டும் வருகிறது. அதன் இரண்டு வட்டார நிலையங்கள் முறையே கர்நாடகத்தில் சக்ளஸ்பூரிலும் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் சார்ந்த தடியான் குடிசையிலும் செயற்பட்டு வருகின்றன.

ஆய்வுக்கூடத்தோடு கூடிய மண் பரிசோதனைப் பிரிவும் மயிலாடும்பாறை ஆய்வு நிலையத்தில் சேவை செய்கிறது.


பொது விளம்பரப் பணிகள்

வாரியத்தின் தலைமையகத்தில் பொது விளம்பரத் துறை மிகவும் சுறுசுறுப்பான பிரிவு. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏலக்காயை மென்மேலும் பொது, மக்களிடையே விளம்பரப்படுத்தவும், ஏலக்காய். உபயோகம் விருத்தி அடையவும் கைகொடுக்கும் தடங்களில் வர்த்தகப் பொருட்காட்சிகள், கருத்தரங்குகள், மதிப்பாய்வுகள், பிரசார இயக்கங்கள் போன்ற காரண காரியங்களில் முழுமூச்சோடு பாடுபடுவது இத்துறை. இவை போக, இந்திய ஏலக்காய்த் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடும் இலட்சியத்துடன் ஏலக்காய்க்கான மாத இதழ். ஒன்றும் 'கார்டமம்' என்று ஆங்கிலத்திலும், 'ஏலம்' என மலையாளத்திலும் 'ஏலக்காய்' என்பதாக அமுதத் தமிழிலும் 'ஏலக்கி’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது!


ஏலக்காய்ச் செய்தி

ஏலக்காயின் ஏல விற்பனை விலைகளைச் சாகுபடி, மற்றும் விற்பனைத் துறையினரோடு மக்களும் தெரிந்து கொள்ள உதவும் வண்ணம் 'CAP' (Cardamom Auction

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/75&oldid=505986" இருந்து மீள்விக்கப்பட்டது