பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார்கள். பாராட்டுநிலையில் அவர்கள் பார்வை அமைந்துள்ளது. குறையிருப்பின் கூறுகின்ற சீர்தூக்கு நிலையும் பலவிடங்களில் காணப்படு கின்றது. . . பிறநாட்டுத் தமிழர்களின் குழந்தைகள் தமிழை, தமிழ்ப் பண்பாட்டை மறந்து வருகின்றனர். அதற்கு நாம் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல இடங்களில் குறித்துள்ளார்கள். . இடம் பெயர்ந்து வாழும் எல்லாச் சமுதாயத்தினரும் எதிரிடும் சிக்கலில் இது ஒன்று. பண்பாட்டுக் கூறுகளில் மதப்பற்று மறைவது மிகக் கடினம். மொழி மறைவது எளிது. ஏனெனில், அதற்கு அந்த நாட்டில் தேவையின்மையே காரணம். இடம் பெயர்ந்தோர் பலர் ஒரே இடத்தில் கூடி வாழ்ந்தால் அல்லது தாயகம் திரும்புதற்குத் திட்டமிட்டிருந் தால் தாய்மொழிப் படிப்பைத் தமது குழந்தைகளிடையே வளர்க்க எண்ணுவர். இல்லையேல் செய்தி பரிமாற்றத்திற்கு வேற்றுமொழிகள் பயனாவதால் தாய்மொழி, வீட்டு மொழி யாக நாளாவட்டத்தில் பழக்கம் இன்றி மறையும் நிலையை பிஜி, டிரினடாடு முதலிய இடங்களில் வாழும் மக்களிடையே நாம் காண இயலும். இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களிடையேயும் இந்த இடர்ப்பாடு உண்டு. - தாய்மொழிப் படிப்பு, பண்பாடு இவற்றை வளர்க்க இடம்பெயர்ந்தோர் தாய்நாட்டை எதிர் நோக்குவது, தாமே கழகங்கள் அமைத்துத் தேவையான பாடநூற்கள், கருவிகள் முதலியவற்றை உருவாக்குவது, இரு நிலையினரும் சேர்ந்து கூட்டு முயற்சி செய்வது என்று மூன்று நிலைகளில் இந்தச் சிக்கலுக்கு நாம் விடைகாண முயல இயலும். பிட்ஸ்பர்கில் உள்ள திருமால்கோவில், ஐக்கிய அமெரிக்கா வில் வாழும் இந்தியர்கள் தொகுத்த நிதியினால், தென்னகக் கலைச் சிற்பிகளின் உதவியால் உருவாக்கப்பட்டது. மூன்றாவது நிலைக்கு இது தக்க எடுத்துக்காட்டு. தமிழ் நாட்டில் உள்ள சூழ்நிலைக்கேற்பத் தமிழ்ப் பாடநூற்கள்