பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரிச் 15.4.85 109 ஒரு புறம் ஏழை நாடு வளரும் நாடு எனவும் (Develop ing Country) பல்வற்றைச் சொல்லிக்கொண்டு, கோடிக் கணக்கான ஏழைகளைக் குடிசையில் வாழ வைத்து, ஒரு சிலருக்கு இத்தகைய இந்திரலோகவாழ்வை அளிக்கும் நிலை யினையும் இந்த வேறுபாட்டினை வளர்க்கும் அரசுகளையும் எண்ணிப் பார்த்தேன். விடை கிடைக்கவில்லை. என் அறை யில் வந்து, அமைதியாக இருந்து கடந்த சில நாட்களையும். நாடுகளையும் எண்ணிக்கொண்டே படுக்கச் சென்றேன். மறு. நாள் உலகப்பெருநாடாகிய அமெரிக்காவில் கால் வைக்கும் நிலையினையும் நினைந்தேன். இரவு மணி பதினொன்று: எனவே உறங்கினேன். காலை 5 க்குக் கண் விழித்தேன்.