பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நான் புறப்பட வேண்டிய விமானம் சற்றே காலம் தாழ்த்து 1-15க்குப் புறப்பட்டது. 8 மணி 40 நிமிடங்கள் (சும்ார் 9 மணிநேரம்) விமானப் பயணம் என் சுற்றுப் பயணத்தில் பம்பாயிலிருந்து சூரிச் நகருக்கும் இங்கிருந்து நியூயார்க் நகருக்கும் மேற்கொண்ட பயணங்களே 9 மணி நேர நீட்டிப்பிற் குரியன. பம்பாயிலிருந்து வந்தபோது இரவாகையால் உறக்கத்தில் ஒன்றும் தெரியவில்லை. பம்பாய் நகருக்கும் இதற்கும் 5 மணி நேரம் வித்தியாசம். அப்படியே சூரிச் நகருக்கும் நியூயார்க் நகருக்கும் 7 மணி நேரம் வித்தியாசம். ஆகமொத்தம் 12 மணி வித்தியாசத்தில் இந்தியாவும் நியூயார்க்கும் உள்ளன. முன்னதில் இரவு நீண்டு கொண்டே வந்தது. சூரிச்சில் 12-45க்குப் புறப்பட்டு நியூயார்க் 2-25க்குச் சேருமென்றால் (சுமார் 9000.கி.மீ5600கல்) அதிசயமாக இல்லையா. ஆம் ஏழுமணி இடை வெளியே இதைச் சரி செய்தது. ஐரோப்பிய நாடுகள் நான் கிண்னக் கண்ட மனநிறைவில்-மறு கண்டத்தில் கால் வைக்கப்போகிறோம் என்ற உணர்வில் விமானத்தில் கால் வைத்தேன். விமானமும், வேற்று விமான வரவுகளால் - வழியிடை தடைநீங்க, சரியாக 1-15க்குப் புறப்பட்டது, விமானத்தின் உபசரிப்பு போற்றற்குரியது. எல்லா விமானங்களிலுமே உபசரிப்பு போற்றக்கூடியதாக இருக்கும். நல்ல உணவு பழரசம் பாதம் முதல் வேர்க்கடலை வரையில் பருப்பு வகைகள் - பலவகை மரக்கறி, மாமிச உணவுகள், தேவையானபோதுகாப்பி, டீ, சாக்லெட் போன்ற மிட்டாய். கள் வேறு குடிப்பொருள்கள் பயணிகளுக்குத் தரப்பெற்றன. மாமிச உணவுகொண்டு, குடிக்கும் நிலையில் உள்ளவர்கள் இந்த இடைவெளி 9 மணி நேரத்தில் சுமார் ரூபாய் 400 மதிப்புள்ள (வெளியே உள்ள விலைகளின்படி) உணவு, குடிப் பொருள்களை உட்கொள்ளுவர். என்போன்ற மரக்கறி யாளர் ரூபாய் 100 அளவிலே - அன்றிச் சற்றே அதிகமாகவே கொள்ளமுடியும். சிலமுறை அவர்கள் உபசரிப்பு அதிகமாக இருந்தது. நான் வேண்டாம் என்றே சொல்லும் நிலை