பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 22.4-85 149 கிறார்களே அவற்றை என்ன செய்கிறார்கள் என்பது தெரிய வில்லை. நியூயார்க், இலண்டன் போன்ற நகரங்களில் உள்ள உலக முக்கியத்துவம் வாய்ந்த இவற்றிற்கு அனுப்பிப் பதிய வைத்தால் தமிழ் வளரும் வரலாற்றினை உலகம் உணரு மல்லவா? செய்வார்களா? ... • இந்திய நூல்கள் தலைப்பிலே நான் மேலே சொல்லிய படி இராதாகிருஷ்ணன், காந்தி, நேரு போன்றார் தம் நூல் களும், அரசாங்கம் பற்றிய சட்டதிட்ட விதிகளும், நேஷனல் நூல்நிலையம் போன்றவை பற்றியும் சென்னை இந்தியன் ரிவின்யூ, பூனா மொழிஆய்வு நூல்கள், இந்திய மருத்துவக் கழக நூல்கள், இந்தியன் ஆண்டிகோரி, இந்தியக் கலை பற்றிய வெளியீடுகள், இந்திய நாட்டுப்புறப்பாடல்க்ள். பிற பம்பாய், தில்லியில் உள்ள பெருநிறுவனங்களின் பதிப்புகள் இடம் பெற்றுள்ளன. அங்கும் பாரதிய வித்யாபவன், தில்லிப் பதிப்பகம் ஆகியவை வெளியிடும் நூல்கள் (பல தமிழ்நூல் கள்) இல்லை. எங்கும் இந்தக் குறைதானா என்ற எண்ணத் தோடு, அதற்கும் காரணம் நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்ளாததே என்ற உணர்வோடு, தன்னுடைய ஆற்றல் உணரா ரிடையிலும் தம்மைப் புகழ்தல் தகும் என்ற பவணந்தியார் வாக்கை இனியாவது செயல்படுத்த வேண்டும் என்ற உளத்தோடு வெளியே வந்தேன். வெளியே ஹரே கிருஷ்ணய இயக்கப் பிரசாரம் நடை பெற்றுக்கொண்டிருந்தது. அமெரிக்க வெள்ளையர் அமைதி யாக வருவோருக்கு அந்த இய்க்கம் பற்றி விளக்கி, இலவச வெளியீடுகளையும் தந்துகொண்டு அந்த இயக்கம் பற்றியும் மரக்கறி உணவின் சிறப்பினைப் பற்றிக் கூறிக்கொண்டு, அன்றுமாலை அங்கே நடக்கும் கூட்டத்திற்கும் மரக்கறி உணவு உண்பதற்கும் அனைவரையும் அழைத்தனர். என்னை இனங்கண்டு, நூல் தந்து, சென்னை முகவரியும் தந்து (232.கீழ்ப்பாக்கம்:தோட்டச்சாலை, சென்னை-10-தொலை பேசி 882286) அங்கே தொடர்பு கொள்ளச்சொன்னார்கள். நான் நன்றி கூறிப் புறப்பட்டேன்