பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால்டிமோர் 26-4.85 173 மூலம் வரும் வருவாயினைக் கொண்டே அதை மேலும் மேலும் செப்பனிடுகிறார்களாம். அங்கே சுற்றியுள்ள ஒட்டல்களில் கூட்டம் மிகுதியாக இருந்தது. வரும் கோடை யில் இங்கே நிற்கக்கூட இடம் இல்லா அளவில் பெருங் கூட்டம் மாலை வேளைகளில் கூடும் என்றனர். பின் பக்கத்தில் ஒரு பெருமாளிகைக்குக் கடைக்கால் இடும் முறையினை நின்று கண்டேன். எங்கும் தெருவிலோ . நடைபாதையிலோ கடைகள் வைக்கப்பெறவில்லை. ஆனால் நம்நாட்டில் அரசாங்கமே மக்கள் நடைபாதையினைக் கடை பாதை யாக்கி வளர்த்துவரும் அவலச் செயலை எண்ணி னேன். சென்னை நகராட்சியாளரும் சமூக, நலத்துறை யினரும், அரசாங்கப் பால்வள நிறுவனத்தாரும் நம் பள்ளி யின் முன்பே கடை அமைத்து, எவ்வளவு வேண்டியும் அப்புறப்படுத்தாத அரசாங்கத்தின் கல்வி வளர்க்கும் - "நகர்நலம் காக்கும் நிலையினை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஏன் இங்கேயே என் பணியினை - பள்ளியினைத் தொடங்கக் கூடாது என்றுகூட நினைத்தேன். .ஆயினும் இந்த நாட்டுச் சட்டம் நான் தொடர்ந்து இருக்க இடம் தரர்து அல்லவா! - பலவற்றைக் காட்டிக்கொண்டே அன்பர் அவர்கள் கார் நின்ற இடத்துக்கு அழைத்து வந்தார். பின் 8 மணி அளவில் வீட்டிற்கு வந்து உணவு கொண்டோம். நாளை வாஷிங்ட னில் என்னை வரவேற்கும் அன்பர் திரு. சதர்னந்தம் அவர் கள் தொலைப்ேசியில் பேசினார்கள். நான் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அங்கே என்னென்ன செய்ய வேண்டும் எனக் கேட்டறிந்தார்கள். நாளை பிற்பகல் 1 மணி அளவில் திரு. பெரியசாமி அவர்கள் தம் காரிலேயே அங்கே அவர் இல்லத்துக்கு அழைத்துச்சென்று விடுவதாக ஏற்பாடு செய்தார். '. பின் முன் அறையில் சற்று அமர்ந்திருந்தேன். அன்னை யார் நம் நாட்டுப் பழக்கவழக்கங்கள் பற்றியும் விழாக்கள் முதலியவைபற்றியும் காரணங்கள் கேட்டனர். இங்கே சிலர்