பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 உண்ட்ான் கருத்துகளுடன் இணைத்து எழுதியுள்ளேன். பல்வ்ற்றை ஆங்காங்கே உள்ள அன்பர்கள் கூறிய சொற்களைக் கொண்டும் அவ்ர் பெற்ற அனுபவ் முதலியவற்றைச் சொல்லக் கேட்டும், சில் அனுபவங்களை நானே நீேரில் பெற்ற நின்லயினும் எழுதியுள்ளேன். எனவே இங்கே பல கருத்துகள் ஆங்காங்குள்ள அன்பர்கள் சொன்னவை என எண்ணல் வேண்டும். அக் கருத்து அடிப்படையில் நான் என் உள்ளத்தெழுந்த சில நெகிழ்ச்சி' களையும் எழுத்தில் வடித்து, அவர்கள் காட்டியன நல்லன வாயின் நாமும் கொள்ளலாமே என்ற உணர்வில் சில எழுதியுள்ளேன். எனவே இந்நூலின் என் கருத்துடன் வேறு பலருடைய கருத்துக் கோவைகளும் எண்ண அலைகளும் இடம்பெற்றுள்ளன. பல நாடுகள்ையும் நகரங்களையும் கண்டபோது அவ்வந்நாட்டு வள்ர்ச்சிகளும் பிறவும் என்னை நெடிது நினைக்கத் துர்ண்டின். சிறப்பர்க நம் தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ்ச் சமுதாய நிலை ஆகியவை ஆங்காங்கே யும் நம் தமிழ் நாட்டிலும் எப்படி உள்ளன என்பதை என் உள்ளம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில உண்மைகளை யும் ஏன்? சில கசப்பான செய்திகளையும் எழுத வேண்டி வந்தது. அவற்றால் நான் யாரையும் குறை கூற வில்லை; குறைகூற வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. சிறு சிறு நாடுகளெல்லாம் - சென்ற போரில் முற்றும் அழிந்த தாதக் கருதப் ப்ெறும் நாடுகளெல்லாம். ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் தன்நிலை உணராதிருந்த நாடு ளெல்லாம் இன்று உலகின் உச்சியில் ஓங்கி நிற்கும்போது, நம் நாடு-பல ஆயிரமாயிர்மாண்டுகளாகப் பண்பாட்டு டன் வாழ்ந்த நாடு - உரிமை பெற்று நாற்பது ஆண்டுகள் முடியப் போகிற நாடு எங்கோ பின்னிற்பதை எண்ணும்போது உண்டான வருத்தத்தில் சிலசில எழுத்துக்கள் உருவாகி உள்ளன. அப்படியே அவ்வந் நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் திருக் கோயில்களிலும் நூல் நிலையங்களிலும் தமிழ் ஓங்கி விாழ, தாய்ாகிய நம் நாட்டு நிறுவனங்களில் அந்த அளவில்கூட இல்லாமல் வ்ேற்று மொழி வள்ரும் அளவில்கூட நம் தாய் மொழி