பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் காரின் செலவைக் குறைப்பது மட்டுமின்றி, நெடுங்தொலைவு ஒட்டும் வேலையினையும் நான்கு நாளுக்கு ஒருமுறையாகத் தருவதனால் உடலுக்கு ஒய்வும் அமைகிறது. காலை 7.15க்குப் புறப்பட்ட (புதியநேரம் . முந்நாள் வரை 6.15) நாங்கள் - வேலை நேரமாதலால் - நீண்ட கார் வரிசையின் இடையே மெல்ல ஊர்ந்து ஊர்ந்து 8 மணி அளவில் தான் அவர் அலுவலகம் சேரமுடிந்தது. நானும் அவரும் மறுபடியும் கனடா தூதுவரகம் சென்றோம். அவர்கள் உடனிருந்து உதவி, வேறுபணி பொருட்டு வெளியே சென்று வருவதாகக் கூறிப் புறப் பட்டார். (நடந்தேதான்) இங்கே காரினைச் சாலைகளில் நிறுத்திவைப்பதில் இடர்ப்பாடு உண்டு; இடம் கிடையாது. ஒருமணி நேரம், அரைமணி நேரம் தான் நிற்கவேண்டும் என்ற கட்டுப்பாடும் சில இடங்களில் உண்டு. எப்படியோ ஓரிடம் பிடித்து நிறுத்தினர்; எனவே மறுபடியும் எடுத்துச் சென்றால் அங்கே நிறுத்தவும் திரும்பவும் இங்கே வந்து நிறுத்தவும் பெரும்பாடு ஆகும் என அங்கு நடந்து சென்றார். நான் உரிய விண்ணப்பத்தைக் கொடுத்து, அவர்கள் முத்திரையும் பெற்றேன். எனினும் மறுபடி பப்பலோ நகரில் சென்று, அங்குள்ள கனடா தூதரகத்தைக் கண்டால் வேறுசில குறிப்புக்களும் தேவையானால் நீர் வீழ்ச்சிக்குச் செல்ல, அங்கே தங்க ஏற்பாடும் செய்து தருவார்கள் என்றும் சொன்னார்கள். பிற்கு நாங்கள் இருவரும் (அவர் பணி முடித்துத் திரும்பி வந்தார்) சுவிஸ் ஏர்லைன்ஸ், சென்றோம். அவர்கள் முன் கொடுத்த பயணச் சீட்டின் வழியினை மாற்ற இயலாதெனவும், வேண்டுமாயின் தனிச் சீட்டு எடுத்துக் கொள்ளலாம் எனவும் குறைந்தது ரூ. 2500 (200 டாலர்) ஆகும் எனவும் கூறினர். எனவே அந்த எண்ணத்தை விட்டு விட்டேன். இரவு திரு. பெரியசாமி அவர்களுக்குக்குத் தொலைபேசியில் சொல்லிவிட முடிவு செய்தேன். பணிமுடிந்ததும் அவர் அலுவலகம் சென்றிருந்து, பின் மாலை 4 மணிக்கு அவருடன் வீடு திரும்புவ தென்பதே முன்