பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் முதல் இருபது பக்கம் அளவையில் அமைத்து வெளியிடு கிறார்கள். நம் நாட்டு நிறுத்தல் அளவில் சுமார் அரை கிலோ இருக்கலாம். விலை 30,35,40 செண்ட் எனப் பல வகையில் உள்ளன. அதாவது ரூ. 3.50, 4, 5 ரூபாய்வரையாகும். ஆயினும் அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. மற்றும் நம் ஊர் போல இந்தப் படித்த பத்திரிகைகளை கிலோ ரூ. 3/-என விற்கவும் முடியாது; எதையும் (பழையன) யாரும் வாங்குவது இல்லை. இத்தனைப் பத்திரிகைகளை யும் குப்பையில்தான் போடவேண்டும். அவர்கள் கூட்டிப் போய்விடுவார்கள். இதை மட்டுமன்றி வீட்டில் பயன் படுத்தும் அனைத்தையுமே தூக்கி எறிய வேண்டியதே. பால் 5 லிட்டர் (; காலன், 1 காலன்) என நல்ல அழகான பிளாஸ்டிக் பெட்டிகளில் நல்ல மூடிகளுடன் வாங்குவர். பால் தீர்ந்ததும் அவற்றையும் குப்பையில் போட வேண்டுவதே. நம் ஊரில் அப் பெட்டி ஒன்று 5 அல்லது 6, 7 ரூபாய் விற்கும். அப்படியே சாப்பிடும் பிளாஸ்டிக் தட்டு, நீர் குடிக்கும் பிளாஸ்டிக் அல்லது காகித டம்ளர் இவை அனைத்தும் வீசி வி ல க் க ப் பட வேண்டியவையே. அதற்கென வீடுதொறும் தெருவில் பெரிய மூடியுடன் கூடிய பெட்டிகள் இருக்கும். அவற்றில் இக் குப்பைகளைக் கொட்டி மூடிவிட வேண்டும். நகர அலுவலர் லாரிகளில் வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை. அவற்றை அப்புறப்படுத்துவர். எனவே இங்கே எதையும் இரண்டாவது திருப்பி விற்பதோ வாங்குவதோ கிடையாது. நம் தெருவில் கேட்கும் பழைய பாட்டல் வாங்குவது, டப்பி வாங்குவது, இரும்பு சாமான் வாங்குவது போன்ற ஒலியே கேட்க முடியாது. எல்லா வீட்டு வேலைகளையும் நாமே செய்யவேண்டிய நிலைபற்றி மேலே சொல்லியுள்ளேன். கடையில் சாமான்கள் எடுத்துவந்து விலையிட்டு வாங்குதல் முதல், பெட்ரோல் பங்கில் உரிய குழாயை எடுத்து நாமே அதைப் பிடித்து உரிய தொகை கட்டிவருவது முதல் வீட்டில் உணவு சமைப்பது,