பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் சொற்களைக் கொண்டு, பல்வேறு வகையில் சிரிப்பூட்டும் விளக்கங்களை தந்தும், மகிழ்வித்தனர். இத்தகைய கலை மற்றவர்களைச் சிரிப்பூட்டும் கலை யாருக்கும் எளிதாக அமைவதில்லை. அந்தச் சொல்லாடல்களும் வெறும் வெற்று வேடிக்கைகளாக இல்லாது, பொருள் பொதிந்தவையாக இருப்பது இன்னும் சிறந்ததாகும். பழங்காலத்தில் திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் நகைப்பூட்டும் சொல் லாடல்களைத் திரைப்படங்களில் கண்டவர் அறிவர். அவ் விடத்தை நிரப்ப இன்னும் தமிழ் பட உலகில் யாரும் வர வில்லையே. மாலையிலும் மழை இருந்து கொண்டே இருந்தது. எனினும் நாங்கள் குறித்தபடியே மாலை 6.30க்கு அவர்கள் வீடு சென்று சேர்ந்தோம். (வீடும் மிக அண்மை யில் இருந்தது - 4 அல்லது 5 கல் தொலைவு இருக்கும்). அனைவரும் ஒருமணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து பல பொருள்களைப் பற்றிப் பேசினார்கள். என்னை அறிமுகப், படுத்தினார்கள். அவர்களும் என்னை விருந்தினராக ஏற்பதில் மகிழ்ந்தார்கள். பின் நல்ல உணவு பரிமாறப் பெற்றது. உணவு உண்டு கொண்டே, நல்லுணவு எது, எப்படி உண்ண வேண்டும் என்பன பற்றியெல்லாம் பேசினோம். இங்கே இந்த நாட்டில் அனைவரும் ஆண் பெண் இருபாலரும் - விருந்தினர் . ஏற்பவர் அனைவரும் ஒருசேர ஒரே மேசையினைச் சுற்றி உட்கார்ந்து உணவுப் பொருள்களை நடுவில் வைத்து-அவரவர் விருப்பப்படி எடுத்து உண்ணும் முறை உள்ளது - ஏற்பவர் (எடுத்தெடுத்து அப்படியே தேவை அறிந்து பரிமாறவும் செய்வர்). உணவு உண்ட பின்னும் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந் தோம். நம்நாட்டு முறையற்றிருக்கும் விமானப் போக்கு வரத்தினைப்பற்றிய பேச்சு வந்தது. அவர்கள் பயணம் அதனால் தனிப்பட்டமை வருந்துதற் குரியது. பின் பத்து மணி வரையில் இருந்து, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். இந் நாளின் நிகழ்ச்சிகளை எண்ணி மகிழ்ந்து கொண்டே, உறங்கச் சென்ற்ேன்,