பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியாகாரா 8.5.85 . r 249 கின்றன; நிமிர்ந்து உயரமாக நிற்கின்றன: அப்படியே பின்னால் செல்லுகின்றன. "Hand Up' என்றால் பின் வாலைத் தூக்கி (4 வரை) அசைகின்றன. அந்தப் பின் வாலால் வீசிறுகின்றன. இவ்வாறு பல வகையில் சுமார் 3/4 மணி நேரம் அவற்றை ஆடிட்ப்படைகிறார் அந்தப் பொறுப்பாளர். இடையிடை அவற்றிக்கு உணவை வீசி எறி கிறார். அவை அவற்றைத் தாவிப் படிக்கின்றன. கடல் வாழ் உயிர்கள் என்னென்ன வகையில் பயன்படுகின்றன. என்பதை எண்ணி, அவற்றை விட்டு மெல்லப் பிரிந்து, நீர் வீழ்ச்சி காணச் சென்றேன். இருபக்கங்களில் நயாகாரா இரண்டாகப் பிரிந்து விழுந்தோடும் காட்சி மறக்க முடியாதது. இப்பேராறு ஐக்கிய நாடுகளையும் கனடாவையும் பிரிக்கிறது. பல நாடு களில் - மாநிலங்களில் ஆறு எல்லையாக அமைவதை நாமறிவோம். இங்கே இருபுறமும் மனிதனால் பிரிக்கப் பெற்ற நாட்டு எல்லையில், இடையில் சலிக்காது, இடை யறாது விழுந்தோடும் 'நியாகாரா' அன்னை பாராட்டுதற் குரியவள். மிக அகலமாக சுமார் 2000 அடி இருக்கும். ஆழமாக (சுமார் 200 இருக்கும்) விழும் அந்த பெருநீர் வானத்தை மறைக்கும் நுண்துளி எழுப்பி, கரையை மறைக் கின்றது. எத்தனை நாள் வேண்டுமாயினும் நின்று காண லாம். தேன்ருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும், செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுக்கும் என்று குற்றால அருவியினைப் பாடிய திரிகூடராசப்பர் இதைக் கண்டால் எப்படிப் பாடுவர் என்று எண்ணினேன். இரு பிரிவாகப் பிரிந்து சில தீவுகளை உண்டாக்கி, பின் இணைந்து ஒடும் இப்பேராற்றின் இடைப்பட்ட சில தீவு களிடையிலும் சென்று கண்டேன். பெரும் பகுதியாக விழும் இடம் பார்வைக்கு குதிரைக் குளம்புபோல் உள்ளமையின் SsoS Horseshoe falls' stsr 2 s) p & Q sir p sår f. நிலவொளித் தீவில் (Moon island) விழும் அருவியினை அமெரிக்கன் நீர்வீழ்ச்சி என்றே அழைக்கின்றனர். இவை