பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ்லேண்டு 11.5.85 259 நாட்டு அறமன்றச் செயல்முறையினையும் பின்னது நிறவேறுபாடற்ற உள்ளம் ஒன்றுபட்டு உருவாகும் சமுதாய இணைப்பினையும் காட்டிய தன்மை என்றும் போற்றக் கூடியது. நான் எனக்கென ஒதுக்கிய கீழ் அறையிலே (சுரங்கம் போன்றது) இருந்தேன். குளிர்மிக அதிகமாக இருந்தது. இது வரை இவ்வளவு குளிர் கண்டதில்லையேஎன எண்ணினேன். வெளியிலே நல்ல வெயில்; எனவே காரணமறியாது திகைத்தேன். மாலை 5 மணி அளவில் திருமதி. விஜயா அவர்கள் வீடு திரும்பியதும் இது பற்றிக் கேட்டேன். அவர்கள் கீழிடம் எப்போதும் கதிரவன் ஒளிபரவாமையால் மிகக் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் மேல் தரைமட்டத் துக்கு வருமாறும் சொன்னார்கள். வெளியிலும் நல்ல கதிரொளியும் வெப்பநிலையும் உள்ளது என்றனர். எனவே மேலே வந்தேன். சிறிது நேரத்துக்கெல்லாம் குளிர் பறந்தது. 6 மணி அளவில் சற்றே தெருவில் குழந்தை பிரியாவுடன் சிறிது தூரம் நடந்தேன். நல்ல வெய்யில் 85 சூட்டுநிலை. எனவே வெளியிலேயே ஒருமணி நேரம் உட்கார்ந்து திரு. கந்தசாமி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இங்கும் இராமனால் தடவப்பெறாத அணில் பேருருவில் எங்கள் முன்வந்து நடனமாடி உணவு தேடி விளையாடிச் சென்றது. மாலை 8 மணிக்கு, உணவுக்குப் பிறகு பிரியா படிக்கும் பாடங்களைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் மாண்டிசோரி பள்ளியில் படிப்பதால் - அதுவும் தனியார் நடத்துவதால் - மிகச் சிறந்த நிலையில் அமைந்துள்ளது என்றனர். இங்கும் 4வது வகுப்பில் பயிலும் அக் குழந்தை அழகாக ஆங்கிலத் தில் பாட்டும் கட்டுரையும் எழுதியுள்ளது. செய்முறை (Project) என்ற அடிப்படையில் இந்த ஆண்டு இந்து சமயத்தைப்பற்றி (Hinduism) ஒரு சிறந்த கட்டுரை எழுதி ஆசிரியர்தம் பாராட்டினைப்பெற்ற அக் குழந்தையை நான் பாராட்டினேன். அவர்தம் ஆசிரியர் இக் கட்டுரை