பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இருவரும் என்னிடம் அன்போடு பழகினர். வேனாவின் மகள் நான் எப்பொழுதோ அவர் மிகச் சிறிய பெண்ணாக இரு ந் த போது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வாங்கித் தந்த காஞ்சிபுரம் பட்டுப் பாவாடையினை நின்னப் பூட்டினர். அவர்தம் நினைவாற்றலை வியந்தேன். உணவுக்குப்பின் நெடுநேரம் உரையாடிக் கொண். டிருந்தோம். திரு. கந்தசாமி அவர்கள் இடையில் தொடர்பு இல்லாதிருந்த காரணத்தால், பல நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறினார். வேனா சென்னை வரும்போதெல்லாம் பள்ளிக்கு வந்து என்னைக் கண்டு செல்வார். தமிழர் வாழ்வு - பம்பாயிலும் உலகிலும் - மொழிநிலை; பிற பற்றியெல்லாம் பேசினோம். பின் நள்ளிரவு 12 மணி அளவில் வாடகை வண்டியில் குழந்தைகளிடம் விடைப் பெற்றுக்கொண்டு, பன்னாட்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டோம். அங்கே அனைவரையும் உள்ளேவிட மறுத்தபோதிலும், திரு. கந்தசாமி அவர்கள் அதிகாரிகள் இசைவுபெற்று உள்ளே வந்து உதவி செய்து திரும்பினர். . சுவிஸ்சர்லாந்து விமானப் போக்குவரத்தினர் என் பயணத்துக்கு உரிய எல்லாப் பயணச் சீட்டுகளையும் உதவினர். பம்பாய்வரை நான் நம் நாட்டு விமானத்தில் (Indian Airlines) வந்தபோதிலும், பம்பாயிலிருந்து சுவிஸ் விமானத்திலேயே ஜினிவா வரையில் செல்லவேண்டியிருந் தமையின், அவர்கள் பகுதியில் வழிவிட்டு, திரு. கந்தசாமி திரும்பினர். திரு. வேனா வும் மருமகனும் வெளியிருந்தே வழியனுப்பினர். சுவிஸ் பணியாளர் பெண் . எனக் கு உடனிருந்து எல்லா ஏற்பாடுகளையும் - டிக்கெட், சாமான் கள் அனைத்தையும் சரிபார்த்து வேண்டிய டால்ர் (20) வாங்கி உதவி, உடன்வந்து, இரவு சிறு உணவுச் சாலையில் விட்டு, அங்குள்ள மற்றொரு பெண்ணிடம் என்னை ஒப்படைத்துச் சென்றதோடு, பின் விமானம் புறப்ப்டுமுன் . அந்த இடத்துக்கு வந்து, என்னை ஆற்றுப்படுத்தி விமானத்