பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 13:5.85 377 பெரியது. உலகிலேயே இதுதான் பெரிய விமான நிலையம் என்றனர். நான் வந்த விமானம் தங்குவதற்கு, சுற்றிச் சுற்றி வந்து, உரிய இடத்தில் நிற்க முயன்றபோது, எத்தனை எத்தனை பிரிவுகளும் நிற்குமிடங்களும் இருந்தன என்பதை ஒருவாறு கணித்தறிந்தேன். பின் இறங்கி, வெளி வருவதற்கு எவ்வளவோ தூரம் மின் படிகளின் வழி ஏறியும் இறங்கியும் ஊர்ந்தும் செல்ல வேண்டியிருந்தது. வெளி வருவதற்கும் இறங்கியும் ஏறியும் மாறி மாறி வர வேண்டியிருந்தது. அங்கே, வெளியில் கார் நிறுத்தியிருந்த இடம் பரந்து பல மாடிகள் உடையதாய் - பல - ஆயிரக்கணக்கான கார்கள் நிற்கத் தக்கதாக இருந்தது. அப்படியே இடம் முழுதும் பல 'கார்'கள் நின்றிருந்தன. திரு. கிருஷ்ணன் அவர்கள் தம் கார் விட்ட இடத்தினைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டி யிருந்தது. பின் அதிலிருந்து சுழல் வழியாகக் கார் இறங் கியது. வெளிவருமுன் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஒரு மணி நேரத்துக்கு 2 டாலர் (சுமார் 25 ரூபாய்) என்றனர். நாள்தொறும் கார்கள் வழியே பல லட்சம் டாலர்கள் வரும் என எண்ணினேன். இப்படியே விமான நிலையம் பல துறைகளிலும் . விமானம் நிற்பது முதல் - கார் நின்று 'புறப்படுவது வரை - கடை கண்ணிகள் அனைத்துக் கும் ஒரு நாளைக்குப் பல லட்சங்கள் வருவாய் உண்டு. விமான நிலையங்கள் அரசாங்கத்துக்கோ அந்தந்த நகராட்சிக்கோ உட்பட்டமையின் அனைத்தும் மக்கள் ப்ொது நலத்துக்குப் பயன்படும் என்ற மன நிறைவு அனைவருக்கும் இருந்தது. உலகிலேயே பெரிய விமான நிலய வாயிலில் நிற்கிறேன் என்ற நினைவோடு சிறிது நேரம் வெளியே கண்டு கொண்டிருந்தேன். பின் கடிதங் களைச் செம்மைப் படுத்தி ஒட்டி அஞ்சலகத்துக்கு அனுப்பத் தக்க வகையில் சரி செய்து முடித்தேன். பின் தொலைக்காட்சியினைச் சிறிது நேரம் கண்டேன். செய்திகளைப் பற்றி விமரிசனம் நடைபெற்றது. நம்நாட்டில் சீக்கியர் செய்ய நினைக்கும் செயல்களையும் கண்டேன்;