பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அது மிகச் சிறியதாயினும் பழங்காலத்திய நாழிகை வட்டில் முதலாகிய கடிகாரம் தொடங்கி, இன்றைய வரையில் உள்ள வற்றை அமைத்து, அது வளர்ந்த வரலாற்றைக் காட்டி யுள்ளனர். நம் நாட்டு இலக்கியங்களில் குறிக்கப்பெறும் நீர் விடுமுறையாகிய நாழிகை வட்டில் போன்ற பொருளும் இருந்தது. இவற்றையெல்லாம் கண்டு கொண்டு, மறுபடியும் பஸ் ஏறி ரயிலடிக்கு வந்தேன். மணி ஏழு ஆகும் நிலையில் இருந்தது. பக்கத்தில் இருந்த நிலவரைக் கடைத் தெருக்குள் புகுந்து, அங்கிருந்த விதவிதமான பொருள்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக மெல்லப் பார்த்துக் கொண்டே வந்தேன். அங்கேயே ஒரு கடையில் சில பழங்களை வாங்கிக் கொண்டு, ஒரு கப் டி’யும் அருந்தி விட்டு, அருகில் இருந்த நான் தங்கிய விடுதிக்கு வந்து சேர்ந்தேன். முன்னாள் இரவின் நெடும் பயணக் களைப்பாலும் இன்றைய அலைச் சலாலும் உடன் படுக்கைக்குச் செல்லவேண்டும் எனத் தோன்றிற்று. இங்கே 8 மணி வரையில் சூரியன் இருப்பதால் உறக்கமும் வரவில்லை. என் அறை தெரு ஒரமாக இருந்த தால் விரைந்தோடும் வண்டிகளைக் கண்டு கொண்டே இருந்தேன். ஒடும் வண்டிகளால் ஒசை ஒளியோ, புகையோ, பிற தொல்லைகளோ இல்லை. அங்கங்கே சிகப்பு விளக்கு கள் சாலை ஓரங்களில் கடக்கவும் நிறுத்தவும் அமைக்க, அவற்றின் வழியே தவறாது கார்களை ஒட்டுவது கண்டு மகிழ்ந்தேன். நம் நாட்டில் அத்தகைய விளக்குகள் இருந்தும், உடன் காவலர் இருப்பதுண்டு அல்லவா! அதையும் கடக்கும் ஒட்டுநர் வீரத்தை அறிந்த எனக்கு, இங்கே சாலைப் போக்குவரத்து செம்மையாக-விரைந்து செல்லும் வகையில் அமைந்த நிலை மகிழ்ச்சி தந்தது. மேலும் இங்கே மெல்லச் செல்லும் மாட்டு, குதிரை வண்டி களோ, கைவண்டிகளோ-இல்லை. ஏன்? சைகில் போன்ற வையே அருகியுள்ளன. பேரொலி எழுப்பும் புகைக்கும் மோட்டார். சைக்கில்ோ,ஸ்சுட்டரோகூட இல்லை எனலாம்,