பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோ 23.8.85 351 உண்டாகிறது. அவர் நூல்கள் வைத்திருந்த பெரிய அறைக்குள் சென்றோம். தமிழ் நூல்கள் ஆயிரத்துக்கு மேலும் இருந்தன. தணிகைபுராணம் போன்ற அரிய இலக்கியங்களும் கலைக்களஞ்சியம் போன்றவையும் இருந் தன. வடமொழி நூல்களும் ஆங்கில நூல்களும் பலப்பல. தமிழறிந்த அந்தத் தம்பதிகள் தமிழ்நாட்டுப் பல பேராசிரி யர்களைக் காட்டிலும் தமிழை நன்கு அறிந்தவராய் - தமிழை வளர்ப்பவராய் உள்ளமை கண்டு மகிழ்ந்தேன். அவர் கணிப்பொறியினையும் சொந்தத்தில் வைத்திருக் கிறார். அதில் தமிழுக்கெனத் தனி அமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதைக் காட்டினார். கணியன்பூங்குன்றன் பாட்டினை (புறம் 192) அழகாக அது படி எடுத்துத் தந்ததைக் கண்டு வியந்தேன். 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பெரும்பாடல் அல்லவா அது. உணவுக்குப்பின் அனைவரும் பல்கலைக்கழகம் காணச் சென்றோம். 8மணிக்கு மேலாகியும் சூரிய ஒளி இருந்தது. எனவே எல்லா இடங்களையும் காணமுடிந்தது. விடுமுறை யாதலால் நூல் நிலையம் உட்பட அனைத்தும் மூடியிருந்தன. உயர்ந்த மணிமண்டபத்தில் மணி 8.15 காட்டியது. அதன் மணி ஒலி இசைபாடுவது போல இருக்குமாம். பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்த்து விட்டு வீடு திரும்பினோம். தமிழ்பற்றி ஆராய்ந்து சொற்பிறப்பின் நிலைகாட்டி J&srmo (Elimnological Dictionary in Tamil) Qassifiull-L பழம்பெறும் புலவர் திரு. எமனோ (Emenp) என்பவர் (81வயது) இங்கே உள்ளார். அவரைக் காண வேண்டுமென விழைந்து தொலைபேசியில் பேசினார். அவரே இங்கு வருவதாகச் சொல்லிப் பதினைந்து நிமிடத்தில் வந்து விட்டார். எங்கோ பிறந்து, தமிழ்மண்ணில் வந்து தமிழ் நலம் கண்டு அதை உலகுக்குக் காட்டிய அப் பெரியவரை வணங்கினேன். அவரைக் காண்பதே அரிது என்ற நிலையில், அவரே வந்து சுமார் ஒரு மணி நேரம் எங்களுடன் பேசிக்