பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரோம் 10.4.85 . 71. பெற்றுக்கொண்ட காட்சி என் கண்முன் நின்றது. சென்ற புதன் காலை ஓர் உலக குரு இந்தப் புதன்காலை மற்றொரு உலககுரு அடுத்த புதன் காலை நியூயார்க்கில் இருக்கும் போது எந்த உலக குருவினைக் காண்பேனோ என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தேன். பலத்த காவல் துறையினர் ஆற்றுப்படுத்தினர். எனக் கென ஒதுக்கிய இடம் போப் குரு இருந்து பேசும் இடத்துக்கு உயரிய பீடத்துக்கு வலப்புறமாக மிக அருகில் இருந்தது, அந்தப் பகுதி.முன், இப் பெருமடத்தின் உயர்பணியாளர் - அவர் உற்றார், வெளிநாட்டுத் தூதுவர் அவர்வழி வருபவர் ஆகியோர் இருக்க ஏழெட்டு வரிசை நாற்காலிகள் இருந் தன. நான் சென்ற இடம் அதற்குப்பின், குரு இடத்திற்குச் சுமார்.40 அடி தள்ளி இருந்தது. அங்கேதான் பல நாட்டுப் பெரும் குழுக்களும் தங்கி இருந்தனர். மிக நெருக்கமாகத் தான் பார்க்க முடிந்தது. வேறு பல ஒதுக்கிடங்களும் பொதுவாக யாரும் வரும் இடங்களும் பரந்த அந்த வெளியில் ஒதுக்கப்பெற்றிருந்தன. (அங்கே யாரும் சீட்டு இன்றி வரலாம்). ஒவ்வொரு பகுதியிலும் பலப்பல நாட்டி னர், பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். பலரும் புகைப்படக் கருவி வைத்திருந்தனர். எங்கும் கூட்டம். ஆயினும் இன்று இங்கே சற்றே அமைதி நிலவக் கண்டேன். நாற்புறமும் நோக்கினேன். மக்கள் கூட்டம் கடலென அலைமோதிற்று. ... -- சரியாகப் 10-45; வண்ண உடையணிந்த துப்பாக்கி, கத்தி தாங்கிய வீரர் எண்மர் திசைக்கு இருவராகக் குரு' அமரும் பீடத்துக்கு அருகில் நின்றனர். அவர்தம் உடையும் தோற்றமும் சூலியஸ் சீசர் காலத்துக்கு என்னை அழைத்துச் சென்றன. அத்தகைய பழ்ைப் மரபில் உடையணிந்து தலை குல்லாய் கவிப்ப, துப்பாக்கியும் கூரிய கத்தியும் தாங்கி அசையாது புனையா ஒவியம்போல நின்றனர். பின் ஒரு மணி வரையிலும் அவர்கள் அப்படியே அசையாது நின்ற நிலை அவைகள் வெறும் பதுமைகள்தானோ என