பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 11.4.85 79 வந்து வைத்தனர். நன்கு அமைந்து ருசியாகவும் இருந்தது. ஐஸ், குளிர்பானங்கள், காப்பி முதலியவையும் அளித்தனர். உடனிருந்த ஆங்கிலேயர் தமிழ்நாட்டைப்பற்றியும் பழங்காலத்தில் அரெபிய, மத்தியதரைக்கடல் நாடுகளுடன் கொண்ட தொடர்புகள் பற்றியும் பேசினார். நானும் விளக்கினேன். பல கருத்துக்களை அறிய விரும்பினார்: சொன்னேன். நேரம் சென்றதே தெரியவில்லை. இலண்டன் விமான நிலையத்தே 15க்கு (அந்த நேரப்படி) விமானம் இறங்கியது. அவர் வெளிவரும் வரையில் என்னுடன் இருந்து, சாமான்கள் எடுக்கும் வரையில் உதவி, பிறகு புறப்பட்டுச் சென்றார். நான் என் சாமான்களை எடுத்துக் வெளியே வர் மணி 3.45 ஆகிவிட்டது. வெளியே வந்தேன். ஆனால் யாரும் அழைக்கவில்லை, செய்வதறியாது திகைத்தேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆடவர் யாரும் வீட்டில் இல்லை. அதற்குள் 4.15 ஆகி விட்டது. பக்கத்தில் யாழ்ப்பாணத்து அன்பர் தம் துணைவியாருடன் வந்திருந்தார்; அவர்தம் தமையனார் வருகைக்காகக் காத்திருந்தார். வெளியில் நல்ல மழை . குளிர். அவர் தாம் வேறு திசையில் செல்ல வேண்டியிருந்த தால், என்னை உடன் அழைத்துச்செல்ல (அவர் தமையனார் காரில்) இயலாநிலைக்கு வருந்தினர். பின் அவரே என் சாமான்களை டிராலியில் கொண்டு, பாதாள இரெயிலில் "YMCA'க்கு அருகிலுள்ள நிலையத்துக்கு டிக்கெட் எடுத்து அனுப்பிவைத்தார். பின் குறித்த இடத்தில் இறங்கி, வாடகை வண்டியில் (YMCA) இந்திய மாணவர் விடுதிக்கு வந்தேன். அங்கே இருந்த அன்னையர் அன்போடு ஏற்று, எனக்கு ஓர் அறை தந்து உதவினார்கள். உணவும் இங்கே உண்டு - மரக்கறி உணவே. எனவே என் அறைக்குச் சென்று சிறிது நேரம் ஒய்வு கொண்டேன். ஏழு மணிக்கு உணவு; எனவே அதற்குரிய இடத்துக்குச் சென்றேன். இன்று இங்கே தங்குப வர்தம் குடும்ப விருந்து என அமைத்திருந்தனர். இப் பகுதித் தலைவர் திரு. தாமஸ் என்பார் தலைமை வகித்தார். நல்ல அரிசி, பூசணிக்காய்கறி, உருளைக்கிழங்கு சாம்பார், ஐஸ்