பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 12-4-85 87 பண்பாட்டு நிலைக்களன்கள், நடைபெற்ற, வாழ்ந்து, வளர்ந்து, நிலையுற்றும் நிலைகெட்டும் நின்ற தன்மைகளை யெல்லாம் . எண்ணிக்கொண்டே எல்லா காட்சிகளையும் கண்டுகொண்டே வந்தேன். உந்து வண்டியும் 12.30 மணி அளவில் விக்டோரியா நிலையத்தில் வந்து நின்றது. காலையில் நல்ல வெப்ப நிலையில் வெளிக் கிளம்பினேன். 12 மணிக்குத் திடீரெனக் குளிர்காற்று வீசத் தொடங்கிற்று. குளிர் அதிகமாயிற்று. இன்னும் கோடை வரவில்லை எனவும் இடையில் ஒருசில நாட்கள் இத்தகைய மாறுபாடுகள் இருக் கும் என்றும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கோடை நிலைபெற்று, நல்ல வெப்பச்சூல் உருவாகும் என்றும் கூறினர். நான் நேராக அஞ்சல் நிலையம் சென்று கடிதங்கள் வாங்கிக் கொண்டு அறைக்கு வந்தேன். பின் ஊருக்கும் அமெரிக்கா விற்கும் (நியூயார்க்) கடிதங்கள் எழுதி, பகல் 2 மணி அளவில் அஞ்சலகம் சென்று பெட்டியில் இட்டேன். இங்கே சனிக் கிழமைகளில்கூட அஞ்சலகம் திறப்பு இல்லை என்றனர். எங்கோ ஓரிடத்தில் ஒரு பெரிய அஞ்சலகம் மட்டும் செய லாற்றும் என்றனர். மூன்று மணிக்குப் பெட்டியைத் திறந்து எடுப்பராம். நான் செவ்வாய்க்கிழமை (16-4-85) நியூயார்க் செல்வதால், அங்கே விமான நிலையத்துக்கு வருமாறு அன்பர்களுக்கு எழுதிய கடிதம் அதற்குள் சேருமா என்ற ஐயம் எழுந்தது. எனவே நாளை தந்தி கொடுக்க முடிவு செய்தேன். உணவுக்குப் பின் சற்று நேரம் ஓய்வு கொண் டேன். அன்பர்கள் இன்று மாலை அல்ல்து நாளை காலை வருவதாகச் சொல்லிச் சென்றனர். மாலை 5 மணி அளவில் திரு. ஞானசூரியன் அவர்கள் வந்தார். இரவு 8.30 வரை உரையாடிக் கொண்டிருந்தார். இவர் யாழ்ப்பாணத்தவர். இங்கேயே தங்கிச் செயலாற்று கின்றவர். அறிவியல் அறிஞர் (M. Sc.,). சொந்தமான இடம் கொண்டு, ஒரு மகனையும் இரு பெண்களையும் படிக்க வைத்து, பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். (கடைசி மகள் படிக்கிறாள்). சைவசமயத்து ஆழ்ந்த பற்றுள்ளவர். சென்ற