பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

187


சொற்பொருள்: சாஅய் - வருந்தித் தளர்ந்து, படர் காமநோய். படுதிரை - மோதி ஒலிக்கும் அலை.

விளக்கம்: இரவெல்லாம் அவன் நினைவாலேயே வாடி வருந்துதலன்றி, கண் உறங்காதும் துயருற்று நலிகின்றனள் தலைவி நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்தும் போயினவள். உறக்கமும் பற்றாதே இருந்தால், இனி நெடுநாள் உயிர் வாழாள்: அது நினைந்தே யான் பெரிதும் நோவேன். அவள் சாவைத் தவிர்க்க வேனும், அவனோடு அவளை மணத்தால் விரைவிற் கூட்டுக என்றதாம். யான்தான் நோவேன்; நீயும் தமரும் அறியார்போல் வாளாவிருத்தல் முறையாமோ என்று நொந்ததுமாம்.

108. நயந்த தோள் எவன்கொல்?

துறை : அறத்தொடுநிலை பிறந்தபின்னும், வரைவு நீடிற்றாக, மற்றொரு தலைமகளை வரையுங்கொல்?' என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி, அவட்குச் சொல்லியது.

[து. வி.: தோழி அறத்தோடு நின்று செவிலியும், பிறரும் அவளை அவனுக்கே தருவதெனவும் மனம் இசைந்துவிட்டனர். அதன்பின்னரும் அவன் அவளை வரைந்துவருதலிலே மனம் பற்றாதானாய்க் காலம் தரழ்க்கச், செவிலியின் உள்ளத்தே கவலை படர்கிறது. வேறொருத்தியை அவன் வரைவான் போலும்' என்ற ஐயமும் எழுகின்றது. அதனைக் குறிப்பாலறிந்த தோழி, அதனை மாற்றக் கருதிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

அன்னை வாழி! வேண்டு அன்னை- கழிய
முண்டகம் மலரும் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள் துறந்தனன் ஆயின்

எவன்கொல் மற்றவன் நயந்த தோளே?

தெளிவுரை வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. கழியிடத்தேயுள்ள நீர்முள்ளிகள் மலர்ந்து மணம் பரப்பியபடியிருக்கும் குளிர்ந்த கடற்கரைக்குரியவன் சேர்ப்பன். அவன். எம் தோள்நலத்தையே துறந்து கைவிட்டனனாயின், அவனால் விரும்பப்பட்ட பிற மகளிர்களின் தோள்கள்தாம், என்னாகுமோ?