பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் வாழ்த்து

19


ஒரு செய்யுளும் ஆகும். ஆசிரியப்பாவின் இழிவான மூன்றடி மல்லைக்கு நல்ல எடுத்துக்காட்டும் ஆகும்.

நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.

தெளிவுரை : நீல மேனியினளான, தூய அணிகள்பூண்ட தேவியைத் தன் இடப்பாகத்தே உடையவனான ஒப்பற்ற பெருமானின், இரு திருவடிகள் நிழலின்கீழாக, மேல் நடு கீழ்' என்னும் மூவகை உலகங்களும், முறையே, பண்டு தோன்றின.

கருத்து: அத்தகைய அனைத்துக்கும் மூலவித்தாம் பேரருளாளனின் திருவடி நீழலை, நாமும் வேண்டி, நம் செயற்கும் துணையாகக் கொண்டு உய்வோமாக.

சொற்பொருள்: வாலிமை - தூய்மை; வாலிழை - தூய அணிகளை உடையாளான அம்பிகை. ஒருவன் - ஒப்பற்றவன்; அவன் ஒருவனே ஒருபாதி ஆணும், மற்றொருபாதி பெண்ணுமாகி அமைந்தவன் என்பதுமாம். மூவகை உலகு மேல், நடு, கீழ் என்னும் உலகங்கள்; 'உலகு' எனவே, உலகமும் அதிலுள்ளன யாவும் எனப் பொருள் விரித்தும் கொள்ளலாம்; அவன் அவள் அது எனும் மூவகையாற் சுட்டப்படும் உலகும் ஆம். முறையே - ஒன்றன்பின் மற்றொன்றாக; முதலில் தேவருலகங்களும், அடுத்து மானிட உலகும், இறுதியில் பாதலமும் தோன்றியதெனக் கூறும் தோற்ற முறைமையையும் இது குறிக்கும்.

விளக்கம் : ’நீலமேனி வாலிழைபாகமான வடிவம்’ நினைவிற்கும் பேரின்பம் அளிப்பது; ஒரு பாதி செவ்வண்ணம், மற்றொரு பாதி நீலவண்ணம். ஒளிசெறிந்த இவை தம்முள் கலந்து இணைந்து ஒளிவீசக் காணும் பாவனைக் காட்சியே அளப்பிலாப் பேரின்பமாவதாகும். 'பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று’ எனப் புறமும் (புறம் 379) இவ்வழகைப் போற்றும்.