பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

ஐங்குறுநூறு தெளிவுரை


நலனில் குறைந்தாளல்லள்; யானே அவளால் பண்பும் பாயலும் இழந்து நோவேன் என்கின்றான் தலைவன்.

மேற்கோள்: 'தோழி, இவள் கூறுகின்ற குறை தலைவியிடத்தேயாய் இருந்ததென்று அவள்மேலே சேர்த்தி, அதனை உண்மையென்று உணரத் தலைவன் கூறுதல் இதுவென்பர் நச்சினார்க்கினியர் - (தொல் களவு. 11.)

177. தவறிலராயினும் பனிப்ப!

துறை : தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழி. 'இவள் என்னை வருத்துகற்குச் செய்த தவறு என்?' என்று வினாய தலைமகற்குத், தோழி நகையாடிச் சொல்லியது.

[து. வி. ; இவள் என்பால் எந்தத் தவறு நினைந்து என்னை இவ்வாறு வருத்தமுறச் செய்கின்றாள்?' என்று கேட்கின்றான் தலைவன். அவனுக்குத் தோழி நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

தவறில ராயினும் பனிப்ப மன்ற
இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு
முண்டக நறுமலர் கமழும்

தொண்டி யன்னோள் தோள்உற் றோரே!

தெளிவுரை : ஒன்றினொன்று மேம்பட்டதாக எழுந்து மோதும் அலைகளாலே கொழித்திடப்பெற்ற மணல்பரந்த உயர்ந்த கரையிடத்தேயும், முண்டகத்தின் நறுமலர்களின் மணம் கமழ்ந்துகொண்டிருப்பது தொண்டிப்பட்டினம்; அதனைப் போன்ற நலமிக்கவளான தலைவியின் தோளை அடைந்தோர், தாம் தம்மிடத்தே தவறேதும் உடையவரல்லராயினும், தவறினார் போன்றே தளர்ந்து நடுங்குவர் போலும்!

கருத்து: 'தவறு ஏதம் இல்லாதேயே நீயும் இவ்வாறு நடுங்கிக் கூறுவது ஏன்?' என்றதாம்.

சொற்பொருள் : இவறுதல் - மென்மேல் ஏறுதல்; உலாவுதல். திளைக்கும் - பொருதும். இடுமணல் நெடுங்கோட்டு - குவித்த மணல்மேட்டின் உச்சியில். முண்டகம் - கழிமுள்ளி. பனிப்ப - நடுங்குப.

விளக்கம்: நீர்க்கண்ணேயே செழிக்கும் முண்டகமானது, அலைகள் மென்மேல் எழுந்து மோதுதலாவே அலைப்புண்டு.