பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிவுரை : 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நெல் பலவாக விளைவதாக; பொன்வளம் பெரிதாகிச் சிறப்பதாக' எனத் தலைமகள் வேண்டினள். 'பூவரும்புகள் கொண்ட காஞ்சி மரத்தையும், சினைகளைக்கொண்ட சிறுமீன்களையும் மிகுதியாகவுடைய ஊருக்குரியவனாகிய தலைவன் வாழ்க; அவள் ஏவலனாகிய பாணனும் வாழ்க!' என, யாங்கள் வேண்டினேம்.

கருத்து: 'தன் இல்லறக்கடமைகள் சிறப்பதற்காவனவற்றைத் தலைவி விரும்பி வேண்டினாள்; யாங்களோ, அவள் நலன் பெருகுவதற்காக, நின் நலனை வேண்டினோம்.'

சொற்பொருள்: வேட்டல் - வேண்டுதல், யாய்-தாய்; தலைவியை அவளின் சால்புமிகுதியால் சிறப்பித்துக் கூறியது; அவன் புதல்வனைப் பெற்ற தாய் என்பதும் ஆம்: தன்னைத் தலைவன் துறந்தமைக்கு நோவாது, தன் இல்லத்தைத் தாயாகித் தாங்கும் அறநெறிக்கடனிலேயே மனஞ்செலுத்தின உயர்வை நினைந்து கூறியதாகவும் கொள்ளலாம். நனை - பூவரும்பு, சினை - முட்டை, சிறுமீன் - சிறிய உருவுள்ள மீன், ஊரன் - ஊரே தன்னுரிமையாகக் கொண்ட தலைவன்.

விளக்கம்: ’ஆதன்' என்றது குடியினையும், 'அவினி' என்றது அக்குடியினனாகத் தம் நாட்டினைக் காத்துவந்த அரசனையும் குறிப்பதாம். காவலன் நெறியோடே காவாதவிடத்து அறமும் நிலைகுன்றுமாதலின், 'அவன் வாழ்க' என முதற்கண் வாழ்த்தினள். ’நெற்பல பொலிக' என்றது உயிர்களின் அழிபசி தீர்த்தலான பேரறத்திற்கு உதவியாகும் பொருட்டு; ‘பொன் பெரிது சிறக்க' என்றது, நாடிவந்த இரவலர்க்கு வழங்கி உதவுதற்கு. தலைமகளின் வேட்கை அறம்பேணும் கடமைச் செறிவிலே சென்றதால், அத்தகைய அவள் வாழ்வு சிறக்கத் தலைவனின் நலத்தைத் தோழியர் வேண்டுகின்றனர். பாணனும் வாழ வேட்டது. அத்தகு பெருங். கற்பினாளுக்குத் தலைவன் துயர்விளைத்தற்குக் காரணமாகிய பரத்தையைக் கூட்டுவித்த அவள், அத் தீச்செயலின் விளைவாலே துயருாதபடிக்கு இறையருளை விரும்பி வேட்டதாம். இது, அவன் தலைவனின்