பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



36

ஐங்குறுநூறு தெளிவுரை


தோன்றும், குளிர்ந்த நீர்த்துறையுடைய ஊருக்குரியவனாகிய தலைமகன் வரைந்து வருவானாக; எம். தந்தையும் இவளை அவனுக்குத் தருவானாக' என வேண்டியிருந்தோம்.

கருத்து: நின்னை எதிர்ப்பட்ட போதே, நீ வரைந்தாய் எனத் தலைவி உளங்கொண்டனள்; ஆதலின், இல்லறத்திற்கு வேண்டுவனவே விரும்பி வேண்டியிருந்தனள். யாமோ. 'தலைமகன் விரைவில் வரைந்து வருவானாக; எம் தந்தையும் கொடுக்கத் தலைவியை மணந்து, என்றும் பிரியாது இன்புறுத்தி வாழ்வானாக’ என நின்வரவையே வேண்டியிருந்தோம்.

சொற்பொருள்: நந்துக- பெருகுக. முகைதல் - அரும்புதல். எந்தை - எம் தந்தை; தலைமகளின் தந்தையை, உரிமை பற்றி இவ்வாறு தோழியும் தந்தையெனவே குறித்தனள்.

விளக்கம்: ’நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவுமாகும்’ (தொல் பொருள் 43) என்னும் மரபின்படி இவை நினைக்கப்படுகின்றன. 'வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக’ என்றலின், இப் பிரிவினை வாளாண் பிரிவாகக் கொள்ளுத்லும் பொருந்தலாம்.

உள்ளுறை : மலராது முகையளவாகவே தோன்றினும், தோன்றிய தாமரைமுகை பலரானும் அறியப்படுதலேபோல, அவள் களவைப் புலப்படுத்தாது உளத்தகத்தே மறைத்தே ஒழுகினும், அஃது பல்ராலும் அறியப்பட்டு அலராதலும் கூடும் எனவும்; ஆகவே விரைந்து மணங்கோடல் வாய்க்கவேண்டும் எனவும் வேண்டினேம் எனக் கூறியதாகக் கொள்க.

மேற்கோள் : 'அற்றமில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்' (தொல். கற்பு 9, இளம்.) என்பதன் உரையில், களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின, அப் பரவுக்கடன கொடுத்தல் வேணடும் எனத் தலைவற்குக கூறுமிடத்துத், தோழிக்கு இவ்வாறு கூற்று நிகழும் என்றும் உரைப்பர். ஆகவே, வேண்டிய தெய்வம் வேண்டியது அருளினமையால், அதற்குப் பரவுக்கடன தரவேண்டும் என்று தோழி கூறியதாகவும் கொள்ளலாம்.

பிற பாடம் : துறைக் குறிப்பில், 'நீயிர் இழைத்திருந்த திறம்’ எனனுமிடதது, நீயிர் நினைத்திருந்த தறம்’ எனவும் பாடபேதம் கொள்வர்.