பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

45


பூக்களைப் பூக்கின்றதான துறைபொருந்திய ஊரன் தலைவன். அவனது கொடுமையினை யாம் பெரிதும் பொறுத்தேமாய் ஆற்றிபிருப்பேம்; எம் பெருமையும் மென்மையும் கொண்ட தோள்களோ, தாம் அப்பிரிவை ஆற்றவியலவாய்த் தோற்றுத்தாம் மெலிவதாயின், அவை அவ்வாறே மெலிவதாகுக!

கருத்து : அவன் கொடுமையை யாம் உளத்தகத்தேயே அடக்கினும், எம் தோள்கள் தம் மெலிவாற் புறததார்க்குத் தோன்றுமாறு புலப்படுத்திவிடுகின்றவே! அதனையும் என்னால் தடைப்படுத்த இயலாது என்பதாம்.

சொற்பொருள் : கொடுமை - கொடிதான செயல். நன்றும் - பெரிதும். நன்றும்; 'உம்': அசை நிலை. 'தில்': விழைவுப் பொருளில் தன்மைபிடத்து வந்தது. தோற்க - மெலிக; மெலிவால், தொடிகளைத் தாமும் இழந்துபோக என்பதாம்; தழுவிக் களித்த தோள்கள் இப்போது மெலிந்து சோர்க என்றனளுமாம்.

விளக்கம் : அவளைப் பிரிவால் வாடச்செய்ததுமட்டுமன்றி, அவள் தரும் இன்பத்தினும் பரத்தையரிற் பெறும் இன்பமே சிறந்ததாமென மயஙகியும் திரிந்தமையின. தலைவனின் இப்போற்றா ஒழுக்கத்தினைக் 'கொடுமை' என்றனர். உரிமையுள்ள தனககுக் கொடுமைசெய்துவிட்டுப் பொருளழித்துப் புல்லிய பரத்தையரை அதனை நாடிப்போகும் தலைவனின், அறமறந்த செயலால் புண்பட்ட மனநிலைமையினள் தலைவி என்பதும் இதனால் உணரப்படும்.

உள்ளுறை: 'இழிந்த வேழம் கரும்பிற் பூக்கும்' என்றது, பூத்தலான இயல்பிலே அவற்றிற்குள் இழிவு உயர்வு என்பதேதும் இல்லை. அஃதேபோலத், தலைமகனுக்கு, யாமும் பரத்தையரும் இன்பம் கோடற்குரிய பெண்டிரென்றுபட்டுமே சமமாகத் தோனறினதன்றி,எம் உயர்வும், பரத்தையர் தாழ்வும உணரும் தெளிவு இல்லை என்பதாம்.

மேற்கோள்: 'கருப்பொருளாகிய வேழம்' தானே உவமமாய் அமைந்து உள்ளுறைபொருள் தந்தது'. எனக் காட்டுவர் நச்சினாக்கினியா (தொல். அகத் : 46). இதனுள், தலைமகன் கொடுமை கூறியதல்லது, அககொடுமைக்கு ஏதுவாகியதொன்று விளங்கக கூறியதலள். ஆயினும், இழிந்த வேழம் உயாந்த கரும்பிற பூ கும்' எனவே, அவற்றிறகும் இழவு உயாவாம் என்பது ஓவல்லைம் எல்வாரும் தலைமகற்கு