பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. புலவிப் பத்து

புலவி பொருளாக அமைந்த செய்யுட்கள் ஆதலால், புலவிப்பத்து' என்றனர். புலவி - சிறு கலாம்.

’துணியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று' என்று, திருக்குறள், புலவியை வேண்டுவதும் நினைக.

'புலவி என்பது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறை படாமற், காலம் கருதிக்கொண்டு பயப்பதோர் உள்ள நெகிழ்ச்சி என்பர் பேராசிரியர்.

தலைமகள் கூறுவதும், அவள் பொருட்டாகத் தோழி கூறுவதுமாக இவை அமைந்துள்ளன.

41. பொன்போற் செய்யும் ஊரன்!

துறை : கழறித் தெருட்டற் பாலராகிய அகம்புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலிய பக்கத்தாரையும் இகழ்ந்து தலைவி கூறியது.

[து. வி. : தலைவிக்கு அறிவுரை கூறித் தெளிவிக்கும் உரிமையுடையவராகிய வாயில்கள் வந்து, "தலைவனின் செயலை மறந்து, அவன் மீண்டும் இல்லத்துக்கு வரும்போது அன்புடன் ஏற்றுக் கடமை பேணுமாறு' அவளுக்குச் சொல்லுகின்றனர். அப்போது, உள்ளத்துத் துயரவேகத்தைத் தாங்காதாளான தலைமகள், தலைவனையும், அவனது பரத்தமை ஒழுக்கத்துக்கு உதவியாக அமைந்த பாணன் முதலியோரையும் இகழ்ந்து சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத்து, அவன்ஊர்' என்ப; அதனால்
தன்சொல் உணர்ந்தோர் மேனி

பொன்போற் செய்யும் ஊர் கிழவோனே!

தெளிவுரை: தானீன்ற பார்ப்பினையே தின்னும் கொடுங்குணமுடைய முதலையொடு, வெண்மையான பூக்களும் நிறைந்த