பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


212 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பொருந்திய கறிய குவளையின் மணம் கமழ்ந்து தண்ணி தாயிற்று; ஆகலாற்குரன், இதுபோதும் அதனே விரும்புவே ணுயினேன். எ. அறு. வண்ணம், அழகு நிறமுமாம். வாலிழை, முத்துமாலை யுமாம். புனலாடலும் விளையாட்டே யாகலின், பண்ணே யெனப்பட்டது; 'கெடவரல் பண்ணே யாயிரண்டும் விளே யாட்டு" (சொல். 319). என்றிசின், இறந்தகால முற்றுவினைத் திரிசொல். அவற்றுள், இகுமுஞ் சின்னும் ஏனே யிடத் தொடுக், தகுகிலே யுடைய வென்மனர் புலவர்” (சொல். 275) என்பதனல், சின், படர்க்கைக்கும் அமைவதாயிற்று. கண்ாறுங் குவளை எனக் கொண்டு, கண்போலும் நறிய குவளை என்றலுமாம். புனலாடிய ஞான்று, தலைவியது இழையும், துதலும் ஒளிதிகழ்ந்து பொலிவு சிறந்த காட்சி தலைவன் மனத்தைப் பற்றி நீங்காது விளங்கினமையின், அதுகுறித்து அவற்றை விதந்து, வாலிழை ஒண்ணுதல் எனச் சிறப்பித்தான். தலைவி பண்ணேபாய்வோள் விரைந்தோடித் தன்னைத் தழுவி மகிழ்வுமிக்கு விளையாடிய காலத்தில், அவள் இடையிற் கிடந்து, வண்ணம் சிறக்க, அசைத்து சிறந்தமையின், தழை யினை வண்ண வொண்டழை நுடங்க என உள்ளதன் உண்மை கூறித் தலைவன் இன்புற்ருன். அக்காலை, புனற் குவளே தலைவியின் கண்ணே நிகர்த்தும், அப்புனலின் தட் பம் அவளது மேனிக் தட்பத்தை நிகர்த்தும் முறையே காட்சி யின்பமும் ஊற்றின்பமும் பயந்தமையின், குவளை காறிப் புனல் தண்ணென்றிசின் என்ருன். அவள் பண்ணே பாயா வழிப்புனல் இன்பம்செய்யா தென்றும், எனவே, இதுபோது நிகழும் புனலாட்டிற்கும் அவள் இன்றியமையாள் என் பதைத் தோழி உட்கொள்ளுமாறும், பண்ணை பாய்ந்தெனக் குவளை கள்நாறிய தெனவும், புனல் தண்ணென்றிசின் என . வும் பாராட்டினன். மெய்ப்பாடும் பயனுமவை.